சில விலங்குகள் தங்கள் வாழ்வியல் முறையிலேயே அழகிய வடிவங்கள், (Natural artistry!) கலைநயமிக்க கூடு, வண்ண அலங்காரம் அல்லது ஒலிகள் மூலம் இயற்கையான கலைஞர்களாகக் கருதப்படுகின்றன.
ஆண் பவர்பேர்ட் தனது வாழ்விடம் அருகே சிறிய “அரங்கு” மாதிரி கூடு அமைக்கும். அந்தக் கூட்டை வண்ணமயமான மலர்கள், பழங்கள், சிறிய கற்கள், கூடவே மனிதர்கள் போட்ட பிளாஸ்டிக் துண்டுகள் வரை சேகரித்து அலங்கரிக்கிறது. வண்ணம் மற்றும் ஒழுங்கு தேர்வு செய்யும் திறமை, ஓவியர்போல. பெண் பறவையை ஈர்க்க “அழகியல் கலை” மூலம் போட்டி போடும் தன்மைகொண்டது.
கடலடியில் மணலை தன் சிறிய மூக்கு மற்றும் இறக்கைகளால் சுழற்றி, வட்ட வடிவங்களுடன் கூடிய நுணுக்கமான ஓவியங்களை உருவாக்கும். அந்த வடிவம் சுமார் 2–3 மீட்டர் அகலமாக இருக்கும். மணலில் உருவாகும் இந்த மந்திர வட்டம், பெண் பஃபர் மீனை ஈர்க்கும் “கலை மேடை”. இயற்கையின் மிக அழகான “கடல் ஓவியர்” என்று அழைக்கலாம்.
இவை குறிப்பாக நீல நிறம் மீது ஈர்க்கப்படுகின்றன. தங்கள் கூடுகளில் நீல மலர்கள், பழங்கள், கண்ணாடி துண்டுகள், பிளாஸ்டிக் போன்றவற்றை கலை நயமாக அமைக்கும். நிறங்களை ஒழுங்காகப் பொருத்தும் திறமை, ஓவியக் கண்காட்சி போல தோன்றும்.
புல் இலைகள், நார்களைத் தன் அலகினால் நெய்து, பந்து வடிவ கூடு கட்டும். அது ஒரு பச்சை “நெய்தல் சிற்பம்” போல காற்றில் தொங்கும். ஒவ்வொரு நூலையும் முறையாகச் சுற்றி, சிக்கலான வடிவமைப்புடன் கூடு செய்வது, இயற்கை நெசவாளி கலைஞன் என்பதற்குச் சான்று.
தன் கூர்மையான கொம்புகளை மரத்தின் தோல் அல்லது மண்ணில் உரசிச் சின்னங்கள் (Patterns) உருவாக்கும். இவை கலை நோக்கில் அல்ல; ஆனால் தனது இருப்பைச் சுட்டிக்காட்டும் அடையாளமாகும். அந்தக் குறியீடுகள் மரத்தில் ஓவியம் அல்லது சிற்பம் போலக் காணப்படும்.
சிறகுகளில் இயற்கை ஓவியர் வரைந்ததுபோல அழகிய வண்ணப் பட்டங்கள். அந்த வடிவங்கள் பாதுகாப்பு கலை (மறைமுகம், எதிரிகளை பயமுறுத்துதல்) என்றாலும், மனிதக் கண்களுக்கு ஓர் அற்புதக் கலை. ஒவ்வொரு இனத்துக்கும் தனித்துவமான ஓவியம்.
அதன் கருப்பு–வெள்ளை கோடுகள் ஓர் இயற்கை “வண்ணக் கட்டமைப்பு”. எந்த இரண்டு ஜீப்ராவுக்கும் ஒரே மாதிரி கோடுகள் இல்லை. இது இயற்கை வழங்கிய ஜீவ ஓவியம்.
வால்பீலியை விரித்து காண்பிக்கும் தருணம் ஓர் “நடனக் கலை நிகழ்ச்சி” போல. பச்சை, நீலம், தங்க நிறங்களின் கலவை, ஒரு உயிரோவியமாக ஒளிர்கிறது. நடனம் மூலம் பெண் மயிலை கவரும் “இசை–நடனக் கலைஞன்”.
இவ்வாறு, பறவைகள், மீன்கள், புழுக்கள், பட்டாம் பூச்சிகள், ஜீப்ரா, மயில் போன்றவை தங்களது வாழ்வியல் முறையிலேயே இயற்கை கலைஞர்கள். மனிதர்கள் தூரிகை, வண்ணம், இசை மூலம் கலை வெளிப் படுத்துவதைப் போல், இவ்விலங்குகள் தங்கள் உடல், நிறம், கூடு, நடனம், வடிவமைப்பு மூலமாகவே இயற்கையின் அற்புதக் கலை நிகழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.