
கொள்ளுக்காய் வேளை என்பது சிறகுக் கூட்டு இலைகள் மற்றும் கொத்தான செந்நீலமலர்களைக் கொண்ட ஒரு சிறிய செடி ஆகும். இது மருத்துவ குணங்களுக்கும், குறிப்பாக மலச்சிக்கலை போக்கவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், பயன்படுகிறது .
இது காவேளை, கொழுஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தும் தன்மையை கொண்டுள்ளது. நெற்பயிர்களுக்கு அடி உரமாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் வளர்இயல்பு கொள்ளுக்காய் வேளை கொழுஞ்சி வகையை சேர்ந்தது. இதன் பிறப்பிடம் ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, ஆசியா இந்தியத் தீவுகள் ஓமன், அமெரிக்கா, தென் அமெரிக்காவில் பிரேசில் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் சாலையோரங்களில் தானாக வளரும் சிறு செடி இனம். நெல்லிற்கு அடியுரமாகவும் பயன்படும்.
இது சிறந்த மருத்துவகுணம் உடையது. எதிர்பாற்றலும் ஊட்டமும் கொடுக்கக்கூடியது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
மருத்துவ பயன்கள்
இதன்வேர், பட்டை இலை, விதை ஆகியவை மருத்துவ பயன் உடையது. கோழையை அகற்றுதல், மலத்தை இழக்கும். தாது ஊக்கமூட்டும், சீதபேதி, அகற்றும் பூச்சியை வெளியேற்றும், வாயுவை நீக்கும். நரம்பு மண்டலத்தை ஊட்ட முடியதாக்கும். விஷத்தை முறிக்கும். குடல் புண் குணமாகும். சிறுநீர் பெருக்கும்.
வீக்ககட்டிகளை கரைக்கும், இரத்தம் மூலம் வியாதியை போக்கும். மேக வியாதி / இருதயநோய் குஷ்டம் /ஆகிய வியாதிகளை குணமாக்க வல்லது.
இந்த வேரை இடித்துச் சூரணம் செய்து சிமிலியில் வைத்து நெருப்பிட்டு புகையை உள்ளுக்கு மூக்கில் வைத்தால் அதிக கபம், இருமல், இரைப்பு நெஞ்சடைப்பு குணமாகும்.
இதன் வேருடன் சமஅளவு மஞ்சள், அரிசி கழுவிய தண்ணீர் அல்லது பசுவின் பால் விட்டு அரைத்து கண்ட மாலையுடன் உண்டான வீக்கத்திற்கு போட்டு வந்தால் குணமாகும்.
இதன் வேரை 2 கிராம் எடுத்து மோர் விட்டு அரைத்து குடித்தால் வீக்கம், ரத்தக் கெடுதலால் உண்டாகும் முகப்பரு கட்டி ராஜப் பிளவை முதலியன குணம் ஆகும்.
இதன் வேரை தூளாக்கி மென்று சாற்றை விழுங்கி வெந்நீர் அருந்தினால் எவ்வகை வயிற்று வலியும் குணமாகும்.
இதனை வேருடன் புடுங்கி உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக்கொண்டால் குடிநீராக பயன்படுத்தலாம். எந்தவித வயிற்று வலியும் குணமாகும்.
இதன் இலையை உலர்த்தி பொடி செய்து, அதனுடன் பொட்டுக்கடலைப் பொடி, துவரம்பருப்பு வறுத்த பொடி, சிறிது மிளகு, சிறிது உப்பு சேர்த்து அனைத்தும் சேர்த்து பொடியாக்கி சாதத்தில் போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிட எந்தவிதமான வலியும் குணமாகும்.