Baobab மரம்: ஆப்பிரிக்க மக்களுக்கு கிடைத்த வரம்! 

Baobab tree
Baobab tree

ஆப்பிரிக்காவில் இருக்கும் மிகவும் விசித்திரமான இந்த Baobab மரங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த மரங்கள் இருந்தால் போதும், உண்ண உணவு, குடிக்க நீர் மற்றும் இருக்க இருப்பிடம் கிடைத்துவிடும். பல ஆண்டு காலமாக இந்த மரத்தை ஆப்பிரிக்க மக்கள் தங்களின் வாழ்வாதாரமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் இவ்வகை மரங்களின் விட்டம் பத்து மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். இதன் கிளைகள் மிகவும் தடிமனாகவும், இதிலிருந்து உற்பத்தியாகும் அனைத்துமே பொக்கிஷங்களாக பார்க்கப்படுகிறது. இந்த மரத்தில் பார்ப்பதற்கு ரொட்டி போல இருக்கும் பழங்கள் உருவாகிறது. அவற்றின் மேல் ஓடுகளை உடைத்து உள்ளே பார்த்தால், சிறு சிறு ரொட்டி துண்டுகள் போல இனிப்பும் புளிப்பும் கலந்து சுவையில் பழங்கள் இருக்கும். இது ஆப்பிரிக்க மக்களின் பிரதான உணவாக இருக்கிறது. இதில் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. 

இந்த பழத்தை தினசரி மூன்று வேலை சாப்பிட்டாலும், உடலுக்கு எவ்விதமான பாதிப்பும் வராதாம். இந்த பழத்தின் சாறு ஒவ்வாமைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பழத்தை சாப்பிட்டுவிட்டு வெளியே வீசப்படும் கொட்டைகளில் இருந்து சமையல் எண்ணெய் எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த மரத்தின் இலைகளும் ஆப்பிரிக்க மக்கள் விரும்பி பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்றாக உள்ளது. துளிர் இலைகளை நேரடியாகவோ அல்லது சூப் போல செய்தோ மக்கள் சாப்பிடுகிறார்கள். மேலும் இந்த இலைகளைப் பதப்படுத்தி, பேப்பர் மற்றும் உடைகளை தயாரிக்கிறார்கள். 

இந்த மரத்தை ஒரு இயற்கையான நீர்த்தேக்கத் தொட்டி எனலாம். எப்போதாவது மழை பெய்யும் காலங்களில் இந்த மரம் தண்ணீரை அதிகமாக உறிஞ்சிக் கொள்கிறது. இந்த மரத்தின் நடுவே சிறிய தொட்டி போல வெட்டி எடுத்துவிட்டால் போதும், அதில் தண்ணீர் தானாக சுரந்து மக்களுக்குத் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளும்படியாக சேமிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் வறண்ட நிலப்பரப்பில் இந்த மரம் உயிரைக் காக்கும் அற்புத மரமாக பார்க்கப்படுகிறது. 

மக்கள் இந்த மரத்தில் தங்களின் உணவுப் பொருட்களைக் கூட சேமித்து வைக்கின்றனர். எவ்வளவு காலம் ஆனாலும் சேமிக்கும் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த மரம் அவ்வளவு எளிதில் எரியாது, காட்டுத்தீ ஏற்பட்டு சுற்றியுள்ள மரம் செடி கொடிகள் எரிந்தாலும், இந்த மரம் உயிர்ப்புடன் இருக்கும். சில மக்கள் இந்த மரத்தின் அடிப்பகுதியை குடைந்து வீடு போல பயன்படுத்துகின்றனர். ஒரு மிகப்பெரிய பயோபாப் மரத்தில் 40 பேர் வரை தங்க முடியுமாம். 

இதையும் படியுங்கள்:
பெட்ரோல் தரும் மரங்கள்!
Baobab tree

சில ஆப்பிரிக்கார்கள் இந்த மரத்தினுள் கடைகள் கூட உருவாக்கி பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். உண்மையிலேயே இந்த மரம் ஒரு அற்புத மரம் தான். இதன் காரணமாகவே இந்த மரத்தை Tree Of Life என அழைக்கிறார்கள். ஏனென்றால் மனிதர்களுக்கு எல்லா வகையிலும் இந்த மரம் உதவுகிறது. ஆனால் இந்த மரங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. புதிய மரங்கள் உருவாக்குவதும் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்த கிரகம், மக்களுக்கு எல்லா விதத்திலும் பயனளிக்கும் இந்த அற்புத Baobab மரத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்ற விஷயம் நம்மை உண்மையிலேயே வருந்தச் செய்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com