ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அரியவகை மீன் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

Barramundi Fish
Barramundi Fish

இயற்கையின் அதிசயம் என்பது தோண்டத் தோண்ட கிடைத்துக் கொண்டே இருக்கும் ஒரு அற்புதம். இயற்கையின் அதிசயங்களை நம்மால் விரல்விட்டு எண்ணவே முடியாது. அவ்வாறு இருக்க, பிறப்பில் ஆணாகவும், வளரும்போது பெண்ணாகவும் மாறும் அரியவகை மீன் இனத்தைப் பற்றி பார்ப்போம்.

இந்தோ-பசிஃபிக் பகுதியில் வாழும் இந்த வகை மீன்கள் வட ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா மற்றும் இலங்கை பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. இந்த இன மீன்களை ஆசியன் சீ பாஸ், ஜெயின்ட் பெர்ச், பால்மர், காக்கப், பெக்தி, நாயிர் ஃபிஷ், ஆஸ்திரேலியன் சீ பாஸ் போன்ற பல பெயர்களில் அழைப்பார்கள். இதனுடைய உண்மையான பெயர் Barramundi Fish ஆகும்.

இந்த மீன்கள் பிறக்கும்போது ஆண்களாக இருக்கும். ஒரு மூன்று முதல் நான்கு வயதாக இருக்கும்போது நல்ல வளர்ந்த ஆண் மீனாக மாறிவிடும். அதன்பின்னர் ஒரு 5 முதல் 6 வயதில்தான் பெண் மீனாக மாறும். அதுவும் அது வாழும் நீர் எந்த அளவு உப்பு நீராக உள்ளது என்பதைப் பொறுத்தே, அது விரைவாகவோ அல்லது தாமதமாகவோ பெண்ணாக மாறும். பரமுண்டி மீன் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை வாழுமாம்.

இந்த வகை மீன்கள் சுத்தமான நீர், உப்புநீர் அல்லது இரண்டும் கலந்த நீர் என அனைத்திலும் வாழும். குறிப்பாக, இந்த Barramundi மீன்கள் கடலில் பிறந்து, சுத்தமான நீரில் வாழும் தன்மைக் கொண்டது. முட்டைப் பொரிக்கும்போது மட்டும் சுத்தமான நீர் மற்றும் உப்பு நீர் கலந்த நீருக்குச் செல்லும். நான்கு அடி நீளம் கொண்ட இந்த மீன்கள், 400 மைல் தூரம் வரைக் கூட பயணிக்குமாம். மேலும், பெண் பரமுண்டி மீன்கள் ஒரு சீசனில் சுமார் 32 மில்லியன் முட்டைகளை இடுகின்றன.

ஆணிலிருந்து பெண்ணாக மாறும் இந்த மீன்கள், அப்படி மாறுவதற்கு முன்னரே பாலுறவு கொள்கிறது. அதேபோல், இவ்வாறு மாறுவதால், அந்த இனத்தில் பெண் மீன்களே அதிகம் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஓரினச் சேர்க்கை பென்குவின் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?
Barramundi Fish

பரமுண்டி மீன்கள் அளவுக்கும் சுவைக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால், இவை பெரிய அளவில் மீன்பிடிக்கப் படுகின்றன. அதாவது ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவில் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 30,000 டன் பரமுண்டி மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக மீன் பிடிக்கப்படுவதால், கடலில் இதன் அளவு மிகவும் குறைந்து வருவது வேதனைக்குறிய ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com