உலகின் மிகச் சிறிய முட்டை இடும் பறவை எது தெரியுமா?

Bee Hummingbird
Bee Hummingbirdcredits to audubon.org

உலகிலேயே மிகபெரிய பறவை ஆஸ்ட்ரிச் (தீக்கோழி) என அறிந்திருப்போம். எனில், உலகிலேயே மிக சிறிய பறவையைப் பற்றி அறிந்ததுண்டா? உலகிலேயே மிக சிறிய பறவையைப் பற்றித்தான் இந்த பதிவு விளக்குகிறது.

 • உலகில் மிக சிறிய பறவை, பீ ஹம்மிங் (Bee Hummingbird) என்ற பெயர் பெற்ற பறவையாகும்.

 • இந்த பறவை 5 சென்டிமீட்டர் நீளமும் மற்றும் 1.8 கிராம் எடையும் கொண்டது. இந்த பறவை ஓசனிச்சிட்டு என்றும் அழைக்கப்படுகிறது.

 • இந்த சிறிய பறவையின் இறக்கைகள், மிக மென்மையானதாக காணப்படும்.

 • இதன் இறக்கைகள் நொடிக்கு 60 முதல் 80 தடவை மிக மிக வேகமாக அடிப்பதால் "உசுஉசு" என்ற ஒலி ஏற்படுமாம். அதனால் இதற்கு ஓசனிச்சிட்டு என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. (ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள்)

 • வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்த பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்ற கின்னஸ் சாதனையைப்  படைத்துள்ளது.

 • அதுமட்டுமில்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவை என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கழற்றி மாற்றக்கூடிய பிளாஸ்டிக் பல் துலக்கிகளை அறிமுகப்படுத்தலாமே!
Bee Hummingbird
 • இந்த Bee Hummingbird முன்னே பறப்பது மட்டுமில்லாமல் பின்நோக்கி பறக்கக்கூடிய திறமையையும் பெற்றுள்ளது.

 • இந்த பறவை தண்ணீரில் நின்ற நிலையிலேயே மிதக்கும் திறனை பெற்றுள்ளது. நின்ற நிலையில் மிதப்பதற்கு அதன் இறக்கைகளை ஒரு நொடியில் ஏறத்தாழ 80 தடவைகள் அடித்து மிதக்குமாம்.

 • அவ்வாறு இறக்கைகள் அதிவேகத்தில் அடிக்கும் போது அதன் இறக்கைகளை மனித கண்களால் பார்க்க இயலாது.   

 • இது அந்தரத்தில் பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல், பின்னோக்கியும் நகர வல்லது. நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் திறமைக் கொண்டது.

Bee Hummingbird
Bee Hummingbird
 • பொதுவாக இந்தப் பறவை ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்லும்.

 • இந்த பறவை அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேனை உண்ணும் என கூறப்படுகிறது. அந்தரத்தில் நின்று பறப்பதற்கு "நாற்சி" என்று பெயராம்.

 • இந்த சிறிய பறவை,  பூவின் தேனையும், சிறு பூச்சிகளையும் உணவாக சாப்பிடும்.

 • இந்த சிறிய பறவை, அதன் பறக்கும் திறன் காரணமாக ஒரு நாளில் மட்டுமே 1,500 பூக்களைத் தொட்டு விடும்  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com