குளத்தை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரையின் பயன்கள் பற்றி தெரியுமா?

Benefits of Aagya Thamarai.
Benefits of Aagya Thamarai.Imge credit: CGTN
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ஏரி, குளங்களில் அதிகம் காணப்படும் இந்த ஆகாயத்தாமரை வெளித்தோற்றத்தில் சாதரணமாக இருந்தாலும் பலவகையில் நமக்கு பயன் தருகிறது. மேலும் இந்த ஆகாயத்தாமரை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுவதோடு இயற்கை விவாசயத்திற்கும் உரமாக பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக இந்த ஆகாயத்தாமரை நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் ஒரு இனமாகத்தான் கருதப்படுகிறது. அதேபோல் இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகவும் விளங்குகிறது. இப்படிப்பட்ட ஆகாயத்தாமரையை நாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றி கேடுகளைக் குறைப்பதோடு, மக்கள் வருமானத்திற்கும் ஏற்ற ஒன்றாக மாற்றலாம்.

அந்தவகையில் ஆகாயத்தாமரையின் பயன்களைப் பற்றி பார்ப்போம்.

1. துணிகள் செய்ய உதவும் ஆகாயத்தாமரை: ஆகாயத்தாமரையின் இலைகளை மட்டும் பிரித்து பதப்படுத்தி துணிகள் செய்யலாம். இந்த துணிகள் வெகுநாட்கள் உழைக்கக் கூடியவை மட்டுமல்ல மக்கும் தன்மைக் கொண்டதும் கூட.

Water hyacinth products
Water hyacinth productsImge credit: iTokri

2. கைவினைப் பொருட்கள்: குளங்கள், ஏரிகள் அருகே வசிப்பவர்களுக்கு கவலை ஏற்படுத்துவது எதுவென்றால், அது ஆகாயத்தாமரையின் நீர் ஆக்கிரமிப்புத்தான். ஆனால் அந்த மக்கள் ஆகாயத்தாமரையைப் பயன்படுத்தி பல கைவினைப் பொருட்கள் செய்து விற்றால் வருமானத்தைக் கூட்டிக்கொள்வதோடு நீர் நிலைகளையும் சுத்தம் செய்யலாம். இந்த ஆகாயத்தாமரையின் மூலம் கூடைகள், பைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை செய்யலாம். இவை கைவினைக்கலைஞர்களின் தொழிலை மேம்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
செடிகள் பேசுவது உண்மை என்றால் நம்புவீர்களா?
Benefits of Aagya Thamarai.

3. எரிபொருள் சக்தி: இந்த ஆகாயத்தாமரையை காற்றில்லா செரிமானம் ( Aerobic digestion) மூலம் எரிப்பொருளாக மாற்றிக்கொள்ளலாம். இது புதைப்படிவ எரிப்பொருள் (Fossil fuel) பயன்பாட்டை குறைக்கிறது. ஆகாயத்தாமரையில் உள்ள வேர்கள், தண்டுகள் ஆகியவை நீரில் உள்ள சத்துக்களை வெகுவாக உரிஞ்சுகிறது. இதனால் நீரின் சத்துகள் தாமரையில் பரவி விடுகிறது. ஆகையால்தான் இவை எரிப்பொருளாகப் பயன்படுகின்றது.

4. நீர் சுத்திகரிப்பு: ஆகாயத்தாமரை நீரின் சத்துக்களை உரிஞ்சுவதோடு நீரில் ஏற்படும் மாசுகளையும் சேர்த்து உரிஞ்சுகிறது. இதனால் இது நீரில் உள்ள மாசுகளை நீக்கி நீர் தரத்தையும் பாதுகாத்து வருகின்றது.

ஆகாயத்தாமரை ஒருமுறை வளர்ந்தால் போதும் சில காலங்களிலேயே குளம் முழுவதும் படர்ந்துவிடும். இதனால் நீரை ஆக்கிரமித்து விடுகிறது என்று மட்டுமே எண்ணி அதனை நீக்கிவிடுகிறோமே தவிர அதனுடைய பலன்களைப் பற்றி எண்ணுவதேயில்லை. ஆகாயத்தாமரைகளை நாம் மறுசுழற்சி முறையில் துணிகள், கைவினைப்பொருட்களாக மாற்றுவதோடு உரமாகவும் எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். இதனால் நீரில் மீதமிருக்கின்ற ஆகாயத்தாமரையின் கொடிகள் நீரை சுத்தமாக்கவும் உதவுகின்றது.

logo
Kalki Online
kalkionline.com