செடிகள் பேசுவது உண்மை என்றால் நம்புவீர்களா?

செடிகள் பேசுவது உண்மை என்றால் நம்புவீர்களா?
https://tamil.boldsky.com

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார். அப்படிச் செடி, கொடிகளுக்குக் கூட மக்கள் கருணை காட்டி வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கையில் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது.

தொட்டால் சிணுங்கி என்று ஒரு செடி உள்ளது. அது தன்னை யார் தொட்டாலும் உடனே ஆபத்து வந்ததாகக் கருதி தன்னை சுறுக்கிக்கொள்ளும். அதைப்போலவே, ஒரு செடி தனக்கு வந்த ஆபத்தை இன்னொரு செடிக்கு முன்கூட்டியே தெரிவிப்பது என்பது புதிதாக உள்ளதல்லவா?

‘ஹாரிபாட்டர்’ படம் பார்த்திருப்பீர்கள், அதில் பேசும் செடிகளை காட்டியிருப்பார்கள். அதை ஒரு கற்பனை கதாபாத்திரமாக நினைத்து பார்த்து ரசித்திருப்போம். ஆனால், செடிகளால் உண்மையிலேயே பேச முடியும் என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம், ஜப்பான் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்த வியத்தகு விஷயம்தான் இது. செடிகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளுமாம். அப்படி செடிகள் பேசிக்கொள்வதை பதிவும் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செடி மற்றொரு செடியை தொடர்பு கொள்வதற்கு தன்னைச் சுற்றி பனி போன்று உருவாகியிருக்கும் காற்று வழியே தொடர்பு கொள்ளுமாம். இந்தக் கலவைகளெல்லாம் வாசனை போன்று அருகில் இருக்கும் ஆபத்தை மற்ற செடிகளுக்கு உணர்த்துமாம். இந்த வீடியோ பதிவில் தெளிவாக எப்படி செடிகள் காற்றின் மூலமாக ஒன்றுக்கொன்று தங்களுக்கு வரும் எச்சரிக்கைகளை பெற்றுக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல எதிர்வினை செயலாற்றுகிறது என்பது தெரிகிறது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையை, சைத்தாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூலக்கூற்று உயிரியலாளரான மசாட்சுகு டோயோட்டா, ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற நாளிதழில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தண்ணீரையே பிரசாதமாகத் தரும் விநோத கோயில் பற்றி தெரியுமா?
செடிகள் பேசுவது உண்மை என்றால் நம்புவீர்களா?

காற்று வழியே பரவக்கூடிய வாசனைக்கு சமமான பனி போன்று உருவாக்கி அதன் மூலம் இன்னொரு செடியிடம் தொடர்பு கொள்வற்குப் பயன்படுத்துகிறது. விஞ்ஞானிகள் ஒரு கன்டெய்னரில் செடிகளையும், கம்பளிப்பூச்சியையும் சேர்த்து ஏர் பம்பையும் அத்துடன் இணைத்து வைத்து விட்டனர். கம்பளிப்பூச்சி செடிகளின் இலையை சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், சிதைவடைந்த செடி நன்றாக இருக்கும் செடியிடம் பேசுவதைக் காண முடிந்தது. அங்கு நிறுவப்பட்டிருந்த பயோ சென்சார், சிதைவடைந்த செடி நன்றாக இருக்கும் செடிக்கு தகவல் அனுப்புவதை பதிவு செய்துள்ளது.

சிதைவடைந்த செடி ஆபத்து வருவதற்கான தகவலை முன்னரே நன்றாக இருக்கும் செடிகளுக்கு பரப்புவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவே செடிகள் பேசிக்கொள்வதை முதன் முதலில் பதிவு செய்த நிகழ்வாகும். இதுவரை அவர்கள் இரண்டு செடிகளை மட்டுமே வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com