Stingless Bee Honey - கொடுக்கு இல்லா தேனீக்களின் தேனால் கொட்டும் நன்மைகள்

Stingless Bee & Honey
Stingless Bee & Honey
Published on

மஞ்சு, தன் கையில் கருப்பு நிறத்தில் எதையோ வைத்து சுவைத்து கொண்டிருந்தாள். அப்போது, அந்த வழியாக வந்த அவள் தம்பி, "என்னது அது பாக்க பாஞ்சாமிர்தம் போல இருக்குது" எனக் கேட்டான். அதற்கு அவள், "ஐயோ! இது பஞ்சாமிர்தம் இல்லடா, தேன். அதுவும், இதற்கு பெயர் 'கொட்டாத தேனீயின் தேனாம்'. ரொம்ப சத்தானதாம்" என்றாள். "நீ பொய் சொல்ற. நான் உன்ன நம்பமாட்டேன். தேன் இப்பிடியா இருக்கும்?" என்று கூறிவிட்டு அவன் குடுகுடுவென்று தன் அம்மாவிடம் ஓடினான்.

*****************

ஆமாங்க, மஞ்சு சொன்னது சரிதாங்க! தேனை சேகரிக்கும் தேனீக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றால் உருவாக்கப்படும் ஒவ்வொரு வகை தேன்களிலுமே ஒவ்வொரு விதமான சிறப்பம்சமும் மருத்துவ குணமும் உண்டு. அதில் ஒன்றான (stingless bee honey) அதாவது 'கொடுக்கு இல்லாத தேனீக்களின் தேன்' பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பொதுவாக, தேன் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பல நோய்களுக்கு மாற்று மருந்தாகவும் திகழக்கூடிய ஓர் இனிப்பான உணவு என்பதெல்லாம் நாம் அறிந்ததே. ஆனால், மற்ற தேனுடன் ஒப்பிடும் போது 'ஸ்டிங்லெஸ் பீ தேன்' (stingless bee honey) மிகவும் சத்தான தேன் என்று அழைக்கப்படுகிறது.

அது ஏன் தெரியுமா? வழக்கமான தேனீக்கள் பெரியவை. இவற்றால், சிறிய மருத்துவ பூக்களிலிருந்து தேன் மற்றும் மகரந்தத்தை எடுக்க முடியாது என்பதால் பெரும்பாலும் பெரிய பூக்களில் இருந்தே தேனைச் சேகரிக்கின்றன. ஆனால், இந்த கொட்டாத தேனீக்கள் அளவில் சிறியதாக இருப்பதால், இவற்றால் சிறிய மருத்துவ குணம் கொண்ட பூக்களில் இருந்து தேனைச் எளிதாக சேகரிக்க முடியும். ஆகவே, கொடுக்கு இல்லாத தேனீக்களின் தேன் (stingless bee honey) மற்ற தேன்களை விட அதிக மருத்துவகுணத்தைத் தன்னுள் கொண்டுள்ளது. மேலும், இவற்றில், சுக்ரோஸின் அளவு குறைவாக இருக்கும். அதோடு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
உணவு உண்ட பின் இதையெல்லாம் செய்யாதீங்க!
Stingless Bee & Honey

தேன் பார்ப்பதற்கு கண்ணாடி போல் பளபளப்பாக இருக்கும் அல்லவா? ஆனால், இந்த (Stingless Bee Honey) பார்ப்பதற்கு பஞ்சாமிர்தம் போல் கொஞ்சம் அடர்த்தியாக, திக்காக இருக்கும்.

இதன் மாறுபட்ட தோற்றத்திற்கு காரணம் என்ன? இந்த கொடுக்கு இல்லா தேனீக்கள் பூக்களில் இருந்து தேனை உறிஞ்சும்போது, மகரந்ததுகள்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வருகின்றன. மகரந்த துகள்கள் அதிக அளவில் காணப்படுவதானாலேயே இவை அடர்த்தியான வடிவத்தையும் நல்ல சுவையையும் கொண்டுள்ளன.

கொட்டாத தேனீக்களின் தேன், (stingless bee honey) அதன் மருத்துவ குணங்கள் காரணமாக காலங்காலமாக இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மருத்துவ பலனை நன்கு அறிந்திருந்த பழங்குடிமக்களால் இது 'கடவுளின் அமுதம்' என்றும் 'மருந்துகளின் அன்னை' (Mother Medicine) என்றும் அழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com