பல ஆண்டுகள் இலாபம் ஈட்ட வெற்றிலை தான் பெஸ்ட் சாய்ஸ்!

Betel Farming
Betel Leaf
Published on

விவசாயத்தில் இலாபத்தை ஈட்ட பல வழிகள் இருந்தாலும், விவசாயிகள் விற்பனையை கையில் எடுத்தால் இலாபத்தை அதிகரிக்க முடியும். அதோடு நாம் எந்தப் பயிரை சாகுபடி செய்யப் போகிறோம்; அப்பயிருக்கு சந்தையில் வரவேற்பு இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். இந்த வரிசையில் எக்காலத்திற்கும் சந்தையில் டிமாண்ட் நிறைந்த பொருள்களில் வெற்றிலையும் ஒன்று. சடங்குகள் மற்றும் பூஜை பொருள்களில் வெற்றிலை முக்கிய பங்கு வகிப்பதால் இதறாகான டிமாண்ட் எப்போதுமே இருக்கும். அவ்வகையில் வெற்றிலை சாகுபடி குறித்த தகவல்களை இப்போது பார்ப்போம்.

ஒருமுறை விதைத்தால் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது வெற்றிலை. இம்மரங்கள் தென்னை மற்றும் மூங்கிலைப் போன்று 60 முதல் 70 அடி உயரம் வரை வளரக் கூடியவை. வெற்றிலையை நடவு செய்த பின் 5 முதல் 8 ஆண்டுகளுக்குப் பிறகே பலன் கிடைக்கத் தொடங்கும். அதுவரை பொறுமையுடன் காத்திருந்தால் பல ஆண்டுகளுக்கு நல்ல இலாபத்தை ஈட்டலாம்.

வெற்றிலை பயிரிட மண்ணின் தன்மையை ஆராய வேண்டியது அவசியம்‌. எவ்வகை மண்ணிலும் வெற்றிலை மரங்கள் நன்றாக வளரும் என்றாலும், களிமண் ஏற்புடையதாக கருதப்படுகிறது. மண்ணின் PH மதிப்பு 7 முதல் 8 வரை இருப்பது நல்லது. வெற்றிலை விதைகளைக் கொண்டு நாற்றாங்கால் செடிகளையும் தயாரிக்கலாம். ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்கள் வெற்றிலையை நடவு செய்ய ஏற்றது.

இந்தச் செடிகளை வயலில் சம இடைவெளியுடன், வரிசையாக நட வேண்டும். இப்படி நடவு செய்வது, அனைத்து வெற்றிலைச் செடிகளுக்கும் சம அளவில் தண்ணீர் மற்றும் சூரிய ஒளி கிடைப்பதை உறுதி செய்யும். இதற்கு அதிக நீர்ப் பாசனம் தேவையிருக்காது. வெற்றிலை வயல்கள் நல்ல வடிகால் வசதியுடன் அமைக்கப்பட வேண்டியது அவசியம். ஏனெனில் அதிக மழை பெய்யும் நேரத்தில், மழைநீர் வயலில் தேங்காமல் இருக்க வேண்டும். தண்ணினீர் தேங்கினால் வேரழுகல் நோய் ஏற்பட்டு விடும்.

வெற்றிலைச் செடிகளை நட்ட பிறகு, மாட்டுச் சாணத்தால் ஆன உரங்களைப் பயன்படுத்தினால் செடிகள் நன்றாக வளரும். வெற்றிலை சாகுபடியில் செலவு மிகவும் குறைவு தான். இருப்பினும் இதுபற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு இல்லை.

மழைக்காலத்தில் பூஞ்சைகளின் தாக்குதல் இருக்கும். இந்நேரத்தில் நீர்ப்பாசனத்தைக் குறைத்தாலே நிவாரணம் கிடைத்து விடும். இலைக் கருகல் நோய் ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட இலைகளை மட்டும் கத்திரித்து விடலாம்.

பொதுவாக 2மீட்டர் உயரம் வளர்ந்த பிறகு அறுவடையைத் தொடங்கலாம். ஒவ்வொரு இலையாக பொறுமையாக கத்தரிப்பது, அடுத்தடுத்த மென்மையான இலைகள் உருவாக வழிவகுக்கும். உலகிலேயே வெற்றிலை அதிகமாக பயிரிடப்படுவது இந்தியாவில் தான். இந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகா, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிலை அதிகளவில் பயிரிடப்படுகிறது.

நெல், கோதுமை, மா, வாழை மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களையே விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர். ஆனால் தோட்டக்கலைத் துறைப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலமும் நல்ல இலாபத்தை ஈட்ட முடியும். இதற்கு வெற்றிலை மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
பயிர் சுழற்சி முறை வேணாம்! அதிக இலாபத்திற்கு இனிமே இதை ட்ரை பன்னுங்க!
Betel Farming

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com