பயோ மெடிக்கல் கழிவுகளை எப்படி கையாள்கிறார்கள் தெரியுமா? 

Bio Medical waste management
Bio Medical waste management

பயோமெடிக்கல் கழிவுகள் என்பது, மருத்துவத்துறையில் நோயை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின்போது ஏற்படும் கழிவுகளாகும். சுகாதாரத் துறையில் பயோ மெடிக்கல் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம். இது மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் பயோமெடிக்கல் கழிவுகளை எப்படி கையாலப்படுகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

பயோ மெடிக்கல் கழிவுகள் என்றால் என்ன? 

மருத்துவத்துறையில் தூக்கி எறியப்பட்ட ஊசிகள், சிரஞ்கள், ரத்தம் மற்றும் மருந்துகளில் நனைந்திருக்கும் கட்டுகள், உடல் பாகங்கள், மருந்து கழிவுகள், ரசாயனங்கள் மற்றும் கதிரியக்க பொருட்கள் உட்பட பலதரப்பட்ட பொருட்களை பயோமெடிக்கல் கழிவுகள் எனக் குறிப்பிடுவார்கள். இதை முறையாக அப்புறப்படுத்தவில்லை என்றால் இதன் மூலமாக அபாயகரமான நச்சுக்கள், நோய்க் கிருமிகள் போன்றவை பரப்பப்படும் வாய்ப்புள்ளது. இவை சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும். 

பயோ மெடிக்கல் கழிவு மேலாண்மை: 

  1. இத்தகைய கழிவுகளை தொடக்கத்திலேயே அவை உருவாக்கும்போது முறையாக பிரிப்பது அவசியம். பல்வேறு வகையான கழிவுகளை வேறுபடுத்த, பல வண்ணங்களில் குறிப்பிட்ட கழிவுத்தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலமாக அதை கையாள்வது எளிதாகிறது. 

  2. பயோமெடிக்கல் கழிவுகளை முறையாக கையாளுதல், சேமித்தல் மற்றும் அகற்றுதல் குறித்து சுகாதார நிபுணர்கள் மூலமாக அந்த கழிவுகளை கையாள்பவர்களுக்கும் ஊழியர்களுக்கும் முறையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

  3. இத்தகைய பயோமெடிக்கல் கழிவுகள், கசிவது மற்றும் கையால்பவர்களுக்கு காயங்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க, அதற்கு ஏற்றவாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. 

  4. இவை பாதுகாப்பாக அகற்றப்படுவதை உறுதி செய்ய எரித்தல், ரசாயன கிருமி நீக்கம், மைக்ரோவேவ், ஆட்டோகிளேவிங் போன்ற பல சுத்திகரிப்பு முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் இதற்கான நடைமுறைகள் அனைத்தும் கண்காணித்து தணிக்கை செய்யப்படுகிறது. 

பயோ மெடிக்கல் கழிவுகளை நீக்குவதில் உள்ள சவால்கள்: 

  1. இன்றைய நவீன மருத்துவத்தால் தினசரி உருவாகும் பயோமெடிக்கல் கழிவுகளின் அளவுகள் அதிகரித்துள்ளது. மேலும் அவற்றை கையாள்வதற்கு குறிப்பிட்ட முறைகள் தேவைப்படுவதால் கழிவுகளை நீக்குவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. 

  2. இந்த கழிவுகளில் தொடர்புடைய நோய்த்தொற்று அபாயங்கள் மற்றும் கூர்மையான பாகங்களால் ஏற்படும் காயங்கள் போன்றவை, இவற்றை அகற்றும்போது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவையை அதிகரிக்கிறது. 

  3. பயோமெடிக்கல் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச விதிமுறைகளின் வழிகாட்டுதல்கள் சில சமயம் முரண்பாடாக இருப்பதால் அப்புறப்படுத்தும் செயலானது சவாலாக மாறுகிறது. 

இதையும் படியுங்கள்:
அற்புதம் செய்யும் நித்திய கல்யாணி.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே! 
Bio Medical waste management

இருப்பினும் நம்முடைய சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் மோசமாகும் இத்தகைய பயோ மெடிக்கல் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான முறையான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிப்பதன் மூலமாக, பயோமெடிக்கல் கழிவுகளை கையாள்வதையும், பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதையும் உறுதி செய்து தனி மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வை பாதுகாக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com