இந்த நூற்றாண்டின் பறவை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க!

Bird of the century.
Bird of the century.

ந்த நூற்றாண்டுக்கான சிறந்த பறவையாக Puteketeke என அழைக்கப்படும் Australasian Crested Grebe என்ற பறவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதிகப் பங்காற்றும் பறவைகளைக் கண்டறிய, ‘இந்த நூற்றாண்டுக்கான பறவை’ எது என்பதற்கான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பலர் பங்கு பெற்று, சுமார் 3.5 லட்சம் பேரிடம் வாக்களிப்பு நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில்தான் Puteketeke என்ற பறவை இந்த நூற்றாண்டுக்கான சிறந்த பறவையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

போட்டியின் ஆரம்பத்தில் இந்தப் பறவை பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இதன் தனித்துவமான தோற்றமும் குணாதிசயங்களும் வாக்காளர்களை வியக்கச்செய்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இறுதியில் முதலிடத்தை தட்டிச் சென்றது. இந்தப் பறவைகள் தனது குஞ்சுகளை முதுகில் சுமந்தபடியே பாதுகாப்பாக வளர்க்கும். மேலும், தனது உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்ற முற்றிலும் புதுமையான முறையை இவை கையாளுகின்றன.

அதாவது, தனது உடலின் மீது ஒருவிதமான வாந்தியை உமிழ்வதன் மூலமாக, தனது உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை விரட்டுகிறது. மேலும், இந்தப் பறவைக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் விலங்குகளின் மீதும் இதேபோல வாந்தியை உழிந்து விரட்டுகிறது. இந்தப் பறவையின் சத்தம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது முணுமுணுப்பது, உறுமுவது போன்ற சத்தங்கள் இதன் தனித்துவம். இனச்சேர்க்கை காலத்தில் இந்தப் பறவைகள் ஆடும் நடனமும் இவை முதல் இடத்தில் தேர்வு செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்த பல்லி நீருக்கு அடியிலும் சுவாசிக்கும்!
Bird of the century.

இந்தப் பறவைகள் உலகின் பல கண்டங்களில் காணப்பட்டாலும், குறிப்பாக, அவை நியூசிலாந்தின் தெற்குத் தீவு முழுவதும் அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும், அவை அந்த இடத்தில் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன. அங்குள்ள பல்வேறு நீர்நிலைகளிலும், ஏரிகளிலும் வாழும் இந்தப் பறவைகள், அவை கூடு கட்டுவதற்கும் கடுமையான வானிலை சூழ்நிலைகளை தாங்குவதற்கும் ஏரியின் ஓரங்களில் உள்ள தாவரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இவற்றால் நீருக்கு அடியில் உள்ள தாவரங்களை இணைத்து தண்ணீருக்கு மேலே மிதக்கும்படியான கூடுகளைக் கட்ட முடியும். 

இந்தப் பறவையின் பல குறிப்பிடும்படியான பண்புகள் வாக்காளர்களைக் கவர்ந்ததினாலேயே, இந்த நூற்றாண்டுக்கான சிறந்த பறவையாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com