பறவைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒருவிதம். அப்படி பறக்கும் பொழுதே தூங்கிக்கொண்டு பறக்கும் பறவைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.
சில பறவைகள் பறக்கும்போதே தூங்கும் திறன் கொண்டவை. குறிப்பாக ஃபிரிகேட் மற்றும் அல்பட்ராஸ் போன்ற பறவைகள் தூங்கிக் கொண்டே பறக்கும் திறன் பெற்றவை. இப்பறவைகள் முழுவதுமாக தூங்குவதற்கு பதிலாக மூளையின் ஒரு பகுதியை மட்டும் உறங்க வைத்து மற்ற பகுதியை விழிப்புடன் வைத்துக்கொள்ளும். இந்த நுட்பம் இவை பறக்கும்போது பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.
இப்பறவைகள் தங்கள் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை கடலில் செலவிடுகின்றன. அப்படி பறக்கும் பொழுது குட்டி தூக்கம்போடும் இவை பல நாட்கள் தரை இறங்காமல் காற்றில் இருக்க இந்த குட்டி தூக்கம் உதவுகின்றன. இவை பறக்கும் போது மூளையின் ஒரு பகுதியை மட்டும் உறங்க வைத்து மற்றொரு பகுதியை விழிப்புடன் வைத்துக்கொண்டு பறக்கும். இதற்கு 'யூனிஹெமிஸ்பெரிக்' தூக்கம் என்று பெயர். இதனால் தரை இறங்க வேண்டிய அவசியமின்றி நீண்ட நேரம் காற்றில் இருக்க முடிகிறது.
அல்பட்ராஸ் எனும் பறவை தென்முனைப் பெருங்கடலிலும், வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற்பறவை இனமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டுள்ளது. இதை நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்டவை.
பல மாதங்கள் கடலில் பறக்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியை மட்டும் உறங்க வைக்கும் நுட்பத்தை பயன்படுத்தி தூங்குகின்றன. இதனால் இவை பறக்கும் பொழுது தூங்கும் திறன் பெற்றவை. இதன் மூலம் பல்வேறு நிலப்பரப்பை இவற்றால் கடக்க முடிகின்றது.
ஸ்விஃப்ட் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தரையில் இறங்கும் வரை தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பறந்துகொண்டே கழிக்கின்றன. அத்துடன் இவை பறக்கும்போது தூங்கும் திறனையும், இனப்பெருக்கம் செய்யும் திறனையும் கொண்டுள்ளது. இதனால் அவை நீண்ட இடம்பெயர்வுகளையும், பரந்த தூரங்களையும் நிறுத்தத் தேவையில்லாமல் செல்ல முடிகிறது. இதன் நீண்ட பயணத்தின் காரணமாக இந்தப்பறவை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்பறவையும் நீண்ட தூர பயணத்தின் போது பறக்கும் போதே தூங்கிக் கொண்டு செல்லும் ஆற்றலை கொண்டுள்ளது. இவை ஆர்டிக்கிலிருந்து அண்டார்டிகாவிற்கு நீண்ட தூரம் இடம் பெறக்கூடியவை. இப்பறவைகள் உயர்ந்து பறக்கும் போது சிறிது நேரம் தூங்குவதன் மூலம் தங்களுடைய ஆற்றலை சேமிக்கின்றன. இவை தண்ணீரில் மோதாமல் இருக்கவும், எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.
பட்டை வால் காட்விட் பறவைகள் தங்களுடைய பிரம்மாண்டமான இடைவிடாத இடம் பெயர்வுக்கு பெயர் பெற்றவை. இவை பறக்கும் பொழுது தங்களுடைய மைக்ரோ - ஸ்லீப்ஸை நம்பியிருக்கின்றன. இவை நீண்ட தூரம் பறக்க கூடியவை. அப்படி பறக்கும் பொழுது சிறிது நேரம் தூக்கத்திற்கும் செலவிடுகின்றன. இது அவற்றின் சுற்றுப்புறங்களை பற்றிய விழிப்புணர்வை இழக்காமல் காற்றில் பறக்க அனுமதிக்கிறது.
இவை ஆயிரக்கணக்கான மைல்கள் பறக்க கூடியவை. இப்படி இடைவிடாது பறக்கும்போது சிறிது தூக்கத்தையும் மேற்கொள்கின்றன. இதனால் இவை காற்றில் பறக்கவும், தொடர்ந்து வேகத்தை தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
ஆர்டிக் மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையில் இடம்பெயர்ந்து செல்லும் இந்த பறவைகள் பரந்த பாலைவனங்கள் மற்றும் கடல்களைக் கடக்க வல்லவை. இது வேகமாக பறந்து பல கண்டங்களை கடக்கின்றது. பாலைவனங்கள், பெருங்கடல்கள் போன்ற சவாலான நிலப்பரப்பில் அசால்ட்டாக பறந்து செல்லக்கூடிய இவை பறக்கும்போது சிறிது தூங்கவும் செய்யும். குறுகிய ஓய்வு அதன் பறக்கும் தரத்தை மேம்படுத்துகிறது.
மணல் பைபர்கள் இடம் பெயர்வின் பொழுது சிறிது நேரம் ஓய்வெடுத்து தூங்குகின்றன. அப்படி ஓய்வெடுக்கும் பொழுது இயக்கத்தில் இருக்கும் அவற்றின் திறன் பெரிய நீர் நிலைகளில் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்க உதவுகின்றது. இப்பறவைகள் கண்டங்களைக் கடந்து நீண்ட தூரம் இடம்பெயர்வுகளை தாங்கிக் கொள்ள பறக்கும்போது ஓய்வை பயன்படுத்துகின்றது.
ஸ்வாலோ பறவை நீண்ட இடம் பெயர்வுகளின் பொழுது சிறிது நேரம் ஓய்வெடுக்கும் தன்மை கொண்டுள்ளன. இவை பல்வேறு நிலப்பரப்புகளில் கூட எளிதாக பல மடங்கு தூரத்தை கடக்கின்றன.