

ஆப்ரிக்காவைச் சேர்ந்த ப்ளாக் ஹெரான் பறவை வேட்டையாட ஒரே புதுவிதமான உத்தியை கையாளுகிறது. இந்த பறவை தன் இறக்கைகளை கொண்டு மீனை ஈர்த்து கவ்வுகிறது. ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா மற்றும் நமீபியாவிற்கு இடையே பார்டராக விளங்குகிறது சோப் நதி. இங்கு ஒன்பது வகை கருப்பு ஹெரான் பறவைகள் காணப்படுகின்றன. இந்த பறவைகள் மீனை வேட்டையாடும் விதம் மிக சுவாரசியமானது.
இதை கனோபி வேட்டை என்று கூறுகிறார்கள். இந்த வேட்டை முறையில் இந்த பறவை தன் சிறகுகளைக் கொண்டு ஒரு குடை போன்ற அமைப்பை உண்டாக்குகிறது. இதை ப்ளாக் எக்ரெட் என்றும் அழைக்கிறார்கள். இதன் உடல் முழுவதும் கருப்பு சிறகுகள் கொண்டதாக உள்ளது.
கண்களும் காலும் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது வேட்டையாடும்போது ஒரு குடை போன்ற அமைப்பை உண்டாக்கி அதற்குள் தன்தலையை மறைத்துக் கொள்ளும். இதன் மூலம் தண்ணீரில் ஒரு நிழற்குடை போன்று ஒரு அமைப்பை உண்டாக்குகிறது.
இந்த குடை அமைப்பில் கால் தலை இரண்டையும் குடைக்குள் மறைத்துக் கொள்கிறது. மீன் தண்ணீரில் நீந்தும்போது உடனடியாக அதை பிடித்து உண்ணுகிறது மீன்கள் இந்த குடை போன்ற அமைப்பை பாதுகாப்பான நிழலான இடம் என்று எண்ணி இப்பறவையின் மாட்டிக்கொண்டு இரையாகின்றன. இந்த குடை போன்ற அமைப்பினால் இன்னொரு பயனும் உண்டு இந்த குடை நிழலைத் தருவதால் தண்ணீரில் நீந்தும் மீனை இது சுலபமாக அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. மீனவர்கள் பயன்படுத்தும் சன் கிளாஸ் போன்று இந்தப் பறவையின் குடை அமைப்பு திகழ்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்த பறவை தன் இரையை காலை நேரத்தில் தேடுகிறது. குறிப்பாக சூரியன் மறையும் வேளை இதற்கு வேட்டையாட ஏற்றதாக தெரிகிறது. இதன் உணவு நதிகளில் வாழும் சிறு மீன்கள் ஆகும். நீர்நிலைகள் அருகில் இருக்கும் மரங்களில் மட்டுமே இது கூடு காட்டுகிறது. குச்சிகளைக்கொண்டு ஒரு வலுவான கூட்டைக் கட்டுகிறது. பொதுவாக மழைக்காலத்தில் இவை கூட்டைக் கட்டுகின்றன. இதன் முட்டைகள் கருநீலத்தில் இருக்கும்.
ஹெரான் பறவைகளில் பலவிதம் உண்டு:
ஸ்க்வாக்கோ ஹெரான்கள் (Squacci herons): இதற்கு பக்கவாட்டில் வெள்ளை நிறமிருக்கும்.
பர்பிள் ஹெரான்: இது பெரிய அளவில் இருக்கும்.
கருப்பு கொண்டை இரவு ஹெரான்: கண்ணைப் பறிக்கும் வகையில் இருக்கும்.இதன் அருகே சென்றால் உடனடியாக ஓடிவிடும்.
க்ரே ஹெரான்: இது இலண்டனில் காணப்படுகிறது.
கோலியாத் ஹெரான்: இது மிகப்பெரிய அளவில் இருக்கும்.
பச்சை நிற பின்புற ஹெரான்: இது பார்ப்பதற்கு வெகு அழகாக சிறிய அளவில் இருக்கும்
காட்டில் எக்ரெட்: வெள்ளை நிறத்தில் கொண்டையுடன் காணப்படும் இதை ஆறு மற்றும் நீர் நிலைகளில் இவற்றைக் காணலாம்.
க்ரேட் எக்ரெட்: இது வெள்ளையாக மிகப்பெரிய அளவில் இருக்கும்.