இந்தியாவில் அழிந்து வரும் பிளாக்பக் மான்!

blackbuck population in india
Blackbuck deer
Published on

ந்தியா ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாக உள்ளது. அவற்றில் சில அழிந்து வரும் நிலையில் உள்ளன, மேலும் பல்வேறு வகையான காட்டு விலங்குகளுக்கு இங்குள்ள தங்குமிடம் மிகவும் அற்புதமான பண்புகளில் ஒன்றாகும். இந்த அற்புதமான பன்முகத்தன்மை சுற்றுலாப் பயணிகளுக்கும்,  வனவிலங்குகள் மற்றும் இயற்கையை விரும்புவோருக்கும் ஈர்ப்பு மையமாக விளங்குகிறது. ஆனால், இப்போதெல்லாம் ஏராளமான காட்டு விலங்குகள் அழிந்துபோகும் அச்சுறுத்தலில்  அல்லது கிட்டத்தட்ட அழிந்துபோகும் நிலையில் உள்ளன.

அவைகளில் ஒன்றுதான் ஆன்டெலோப் இனத்தின் ஒரே உறுப்பினரான் பிளாக்பக் மான்  ஆகும். அவை இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இந்த அழகான அழிந்து வரும் விலங்கு பெரும்பாலும் இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் காணப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே பிளாக்பக் பிரபலமாக இருந்து வந்துள்ளது. நமது பல மதக் கதைகளும் இந்த அழகான இனத்தின் பண்டைய காலங்களின் இருப்பை பிரதிபலிக்கின்றன. இந்த தாவரவகை விலங்கு வேகமாக ஓடும் விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆனால் சமீப காலமாக, அவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அவற்றின் உயிர்வாழ்வு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்த மயக்கும் மான் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தர்பூசணி வாங்கப் போறீங்களா? நல்ல பழுத்த பழமா எனப் பார்த்து வாங்க சில ஆலோசனைகள்..!
blackbuck population in india

வேட்டையாடுதல்தான் இந்த விலங்கின் மிகப்பெரிய அளவில் குறைந்து போனதற்கு ஆரம்பகால முதன்மையான காரணமாகும். முன்னதாக, மன்னர்கள் தங்களது அந்தஸ்தின் அடையாளமாக கலைமான்களை வேட்டையாடினர். இந்த உயிரினத்தின் உயிர்வாழ்விற்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற நடைமுறைகள் அனைத்தும் இந்தியாவில் முழு இனத்தையும் மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வந்து வைத்திருக்கின்றன. மேலும், இந்த அப்பாவி விலங்குகள் மான்கள் அவற்றின் தோலுக்காகவும் வேட்டையாடப்பட்டன.

இருப்பினும், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I, அவற்றை வேட்டையாடுவதைத் தடைசெய்து, அதை ஒரு குற்றமாக அறிவித்துள்ளது. கூடுதலாக, இந்த விலங்குகளைப் பாதுகாக்க ஏராளமான தேசிய பூங்காக்கள் மற்றும் பிற பாதுகாப்புத் திட்டங்கள் செயலில் உள்ளன. NRCOPA என்பது இதற்காகச் செயல்படும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com