நீலகிரி மாவட்டத்தில் சதுப்பு நில பகுதியை ஆக்கிரமிக்கும் கட்டிடங்கள்.
ரியல் எஸ்டேட் துறையின் அதி தீவிர வளர்ச்சியின் காரணமாக சதுப்பு நில பரப்புகள் புறம்போக்கு நிலமாக கருதப்பட்டு அவை கட்டிடங்களாக மாற்றப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நில வளங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ரைபிள் ரேஞ்ச் பகுதி மாவட்டத்தின் மிக முக்கிய சதுப்பு நில பகுதியாக இருந்தது. 120 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரைந்து காணப்பட்ட இப்பகுதி தற்போது வெறும் 8 ஏக்கர் அளவிற்கு சுருங்கி இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக சதுப்பு நிலப்பகுதிகள் காலி மனைகளாகவும், புறம்போக்கு இடங்களாக கருதப்பட்டு அவை பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் அதிக அளவிலான குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கிறது.
தற்போது சதுப்பு நிலப்பகுதியாக காணப்படும் 8 ஏக்கர் பரப்பளவில் 7 கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுவே கோத்தகிரியின் 75 சதவீத தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
இந்த நிலையில் ரைபிள் ரேஞ்ச் பகுதியில் உள்ள 8 ஏக்கர் சதுப்பு நிலமும் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக சூழலில் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்படும் என்றும், சுகாதார சீர்கேட்டிற்கு காரணமாக அமையும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் அரசு ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.