இணைய வழியில் நில அளவை விண்ணப்பம் செய்யவும் மற்றும் அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை பெற முடியும்.
தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலைகளை எளிதாக்கும் பொருட்டும் மற்றும் கணினி மயமாக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது நில அளவை விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வட்ட அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டும், நிலங்களை அளக்க லஞ்சம் கேட்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளை தடுக்கவும், தற்போது நில அளவை விண்ணப்பங்களை கணினி மூலம் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நில அளவை விண்ணப்பங்களை கணினி மூலம் விண்ணப்பிப்பது, நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடங்களையும் கணினி வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதோடு, பொதுமக்களுக்கு அலைச்சல் குறையும், மேலும் லஞ்சம் பெறப்படுவதாக எழும் குற்றச்சாட்டும் குறைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
நிலத்தை அளக்க விண்ணப்பிக்க https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை பூர்த்தி செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடங்களை பதிவிறக்கம் செய்ய https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையின் https://tnlandsurvey.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பட்டா மாறுதல் செய்ய முடியும். இது உட்பிரிவுகளுக்கு ஏற்ப இதற்கென்று தமிழ் நிலம் ஊரகம் மற்றும் தமிழ் நிலம் நகரம் ஆகிய மென்பொருட்களும் உருவாக்கி அதோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எளிய முறையில் மக்கள் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.