பட்டாம்பூச்சியும், சுற்றுச்சூழலும்!

Butterfly and environment!
Butterfly and environment!

யற்கை உலகில் பட்டாம்பூச்சிகள் பார்ப்பதற்கு மென்மையான உயிரினங்கள் போல் தெரிந்தாலும், அவற்றின் கவர்ச்சியான அழகிற்கு பின்னால் சுற்றுச்சூழல் அமைப்பை சமநிலைப்படுத்தும் முக்கியப் பங்கு உள்ளது. குறிப்பாக, மகரந்தச் சேர்க்கை மூலமாக சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இந்த உயிரினங்கள்.

மகரந்தச் சேர்க்கையாளர்கள்: பட்டாம்பூச்சிகள் சிறந்த மகரந்த சேர்க்கையாளர்கள். தேனைத் தேடி பூவிலிருந்து பூவுக்கு மாறும்போது, அவற்றிற்கே அறியாமல் மகரந்தத்தையும் இடம் மாற்றுகிறது. இதனால் தாவரங்களின் இனப்பெருக்கம் எளிதாகிறது. இந்த செயல்முறை தாவரங்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, உணவு உற்பத்தியின் முதுகெலும்பாகவும் அமைகிறது. உணவுக்காக நாம் நம்பி இருக்கும் பல காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றின் உற்பத்தியில் பட்டாம்பூச்சிகளின் கவனிக்கப்படாத உழைப்பு உள்ளது. இவை இல்லையென்றால் தாவரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இடையேயான சமநிலை சீர்குலையும்.

பல்லுயிர் காப்பாளர்கள்: பட்டாம்பூச்சிகள் சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியமாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் அளவுகோலாக உள்ளன. அவற்றின் நுட்பமான உணர்திறன் மனிதர்கள் வாழ்வதற்கான சிறந்த இடத்தேர்வை தெரியப்படுத்துகிறது. எங்கெல்லாம் பட்டாம்பூச்சிகள் செழித்து வாழ்கிறதோ அங்கு மக்கள் வாழ்வதற்கான ஆரோக்கியமான சமநிலையான சூழல் உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை கண்காணிப்பதன் மூலமாக விஞ்ஞானிகள் சுற்றுச்சூழலின் போக்குகளை கண்டறிகின்றனர். இது சுற்றுச்சூழல் சவால்களை விஞ்ஞானிகள் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படுவதற்கு உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பாம்பு விஷத்தில் ஒளிந்துள்ள மர்மங்கள்!
Butterfly and environment!

பட்டாம்பூச்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பழக்கத்தின் மூலமாக தாவரங்களின் செயல்பாடுகளை நமக்கு தெரியப்படுத்துகிறது. சில பட்டாம்பூச்சிகள் தாங்கள் முட்டையிடுவதற்கு குறிப்பிட்ட தாவரங்களை மட்டுமே விரும்புகின்றன. இது தாவரங்களின் வளர்ச்சியை முற்றிலும் ஊக்குவிக்கிறது. இது மற்ற உயிரினங்களுக்கான நுண்ணுயிரிகளையும் உருவாக்குகிறது. பட்டாம்பூச்சிகள் மற்றும் தாவரங்களுக்கு இடையே உள்ள உறவு சுற்றுச்சூழல் அமைப்பின் ஒட்டுமொத்த பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்களிக்கிறது.

இப்படி சுற்றுச்சூழல் சமநிலையை பேணிப் பாதுகாப்பதில் பட்டாம்பூச்சிகளின் பங்கு ஏராளம். சுற்றுச்சூழலில் பட்டாம்பூச்சிகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கும், அதிகப்படியான பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கும் நம்மால் இயன்ற முயற்சியை நாம் எடுப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com