பாம்பு விஷத்தில் ஒளிந்துள்ள மர்மங்கள்!

Mysteries hidden in snake venom!
Mysteries hidden in snake venom!

ல நூறு ஆண்டுகளாகவே இந்த ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் நமது கற்பனையைக் கவர்ந்து வருகின்றன. அவற்றின் விஷக்கடிகளின் பின்னால் பல மர்மங்களும் கட்டுக்கதைகளும் மறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விஞ்ஞானிகள் பாம்பின் விஷத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களைக் கண்டறிந்து அதன் தன்மைகளையும் தனித்துவமான பண்புகளையும் கண்டுபிடித்து வருகின்றனர்.

பாம்பு விஷத்தின் பின்னால் உள்ள அறிவியல்: பாம்பின் விஷமானது புரோட்டின், என்சைம்கள் மற்றும் பெப்டைடுகளின் சக்தி வாய்ந்த கலவையாகும். இது பல காரணங்களுக்காக இயற்கையாகவே பாம்பில் உருவாக்கப்படுகிறது. விஷத்தின் முதன்மை செயல்பாடு பாம்பின் இறையை அசையாது ஒரு இடத்தில் தங்கச் செய்வதுதான். இதைத் தாண்டி சில சமயங்களில் கொல்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. சில குறிப்பிட்ட பாம்புகளின் விஷங்களில் நமது நரம்பு மண்டலத்தைக் குறிவைக்கும் நியூரோடாக்ஸின்கள் உள்ளன. அது நமக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தி இரத்தம் மற்றும் திசுக்களை பாதிக்கிறது.

பாம்பு விஷத்தின் மற்றொரு வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், அதன் பரிணாம வளர்ச்சி. பாம்புகள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்ததோ அதேபோல, அவற்றின் விஷமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நேர்த்தியாக மாறுதல் அடைந்துள்ளது. பாம்புகள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றின் விஷத்தின் தன்மையும் மாறுபட்டதாகவேக் காணப்படுகிறது.

மருத்துவத்தில் பயன்படும் பாம்புகளின் விஷம்: பாம்புகளின் விஷம் உயிரைப் பறிக்கும் என்ற பயம் நம் அனைவருக்கும் இருந்தாலும், ஆராய்ச்சியாளர்கள் மருத்துவப் பயன்பாட்டிற்காக இவற்றைப் பயன்படுத்துகின்றனர். பாம்பு விஷத்தின் சில கூறுகள் சிகிச்சை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட பண்புகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக, பாம்பு விஷத்தில் உள்ள புரதங்கள் புற்றுநோய் மற்றும் இரத்தம் உறைதல் பிரச்னையை சரி செய்யும் மருந்துகள் உருவாக்க பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த நூற்றாண்டின் பறவை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க!
Mysteries hidden in snake venom!

பாம்புகளின் விஷத்தில் உருவாக்கப்பட்ட மருந்துகள் ஏற்கெனவே மருத்துவத் துறையில் பல்வேறு விதமான முத்திரைகளைப் பதித்துள்ளது. புதுமையான மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான தொடர்ச்சியான தேடலில் பாம்புகள் உள்ளிட்ட விஷ உயிரினங்களின் ஆய்வு ஒரு மதிப்புமிக்கதாகப் பார்க்கப்படுகிறது.

பாம்புகளின் விஷம் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ளும் அதே வேளையில், லட்சக்கணக்கான உயிர்களைக் காக்கவும் பயன்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com