காலநிலையை தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியுமா?

climate
Can climate be controlled by technology?
Published on

காலநிலை, மனிதகுலம் உருவான காலத்தில் இருந்தே நம் வாழ்வை ஆழமாக பாதித்து வரும் ஒரு இயற்கை ஆற்றல். மழை, வெயில், காற்று என இயற்கையின் இந்த நடனம், நம் விவசாயம், பொருளாதாரம், தினசரி வாழ்க்கை என அனைத்தையும் நிர்ணயிக்கிறது. இயற்கையின் இந்த அபரிமிதமான சக்தியை மனிதன் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறான். மழை வேண்டி பிரார்த்தனை செய்வது முதல், நவீன காலத்தில் செயற்கை மழைப்பொழிவு தொழில்நுட்பம் வரை, இந்த முயற்சிகள் பல வடிவங்களில் நிகழ்ந்துள்ளன. 

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், காலநிலையை மனிதன் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி மிகவும் சுவாரசியமானது. இந்தப் பதிவில் அதுசார்ந்த உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.  

காலநிலை கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள்: 

காலநிலையைக் கட்டுப்படுத்த பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், சில தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. 

செயற்கை மழை: இந்த தொழில்நுட்பத்தில் விமானங்கள் மூலம், மேகங்களுக்குள் ரசாயனங்களை செலுத்தி செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். 

கடல் நீரை ஆவியாக்குதல்: இந்த முறையில் கடல் நீரை ஆவியாக்கி மேகங்களை உருவாக்கி செயற்கையாக மழையை பெய்ய வைப்பார்கள். 

சூரிய ஒளியை குறைத்தல்: வளிமண்டலத்தில் சூரிய ஒளியை தடுக்கும் துகள்களைத் தூவி பூமியின் வெப்பநிலையை குறைக்கும் முயற்சிதான் இது. 

கடல் நீரோட்டங்களை மாற்றுதல்: கடல் நீரோட்டங்களை மாற்றி, பருவ காற்றின் திசையை மாற்றும் செயற்கையான முறை இது. 

காலநிலையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களால் பல நன்மைகள் உள்ளன. செயற்கையாக மழை பெய்ய வைப்பதன் மூலம், வறட்சியை போக்கி விவசாய உற்பத்தியை அதிகரிக்கலாம். அதிகமாக மழை பெய்யும் பகுதிகளில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மழையை குறைக்கவும் முடியும்.  இத்தகைய தொழில்நுட்பங்களால் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்கலாம். மேலும், இதனால் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகக்கூடும். 

இதையும் படியுங்கள்:
இரவில் பழங்கள் சாப்பிடுவதன் நன்மை, தீமைகள்! 
climate

என்னதான், மேற்கூறிய நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் சிலது இருக்கத்தான் செய்கின்றன. ரசாயனங்களை வளிமண்டலத்தில் செலுத்துவதால் மழை நீர் மாசுபடலாம், உயிரினங்களுக்கு தீங்கை விளைவிக்கும். இந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கு அதிக செலவு ஆகும். சில சமயங்களில் எதிர்பாராத பக்கவிளைவுகளை இந்தத் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தக் கூடும். இவற்றால், ஏற்படும் நீண்ட கால தாக்கங்களை நாம் கட்டாயம் கருத்தில்கொள்ள வேண்டும்.  

தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், எதிர்காலத்தில் காலநிலைக் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களும் மேம்படும். செயற்கை நுண்ணறிவு இயந்திரக் கற்றல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காலநிலையை மிகவும் துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com