‘மலை பேய்கள்’ என அழைக்கப்படும் பனிச் சிறுத்தைகளின் சிறப்பியல்புகள்!

அக்டோபர் 23, சர்வதேச பனிச் சிறுத்தைகள் தினம்
International Snow Leopard Day
International Snow Leopard Day
Published on

னிச் சிறுத்தைகள், ‘மலை பேய்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் இவை தனிமை விரும்பிகள். தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை தனிமையில்தான் செலவிடுகின்றன. மத்திய மற்றும் தெற்காசியாவின் இமயமலை, இந்து குஷ் மற்றும் அல்தாய் மலைத் தொடர்களில் வசிக்கும் ஒரு பெரிய பூனை இனமாகும் இது. ஆப்கானிஸ்தான், பூட்டான், சீனா, இந்தியா, கஜகஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா உட்பட 12 நாடுகளில் இவை காணப்படுகின்றன.

வசிப்பிடம்: பனிச் சிறுத்தைகள் 3000 முதல் 5500 மீட்டர்கள் வரை உயரத்தில் உள்ள கரடு முரடான மலைகளில் வசிக்கின்றன. அவை வாழும் இடத்தின் குளிர் மற்றும் கரடு முரடான நிலப்பரப்பிற்கு இவற்றின் உடல் அமைப்பு நன்கு பொருந்துகிறது.

உருவ அமைப்பு: பனிச் சிறுத்தைகள் குளிர்ந்த சூழலில் உயிர் வாழ்வதற்கான உடல் அமைப்பைப் பெற்று இருக்கின்றன. இவற்றின் உடலில் கருப்புப் புள்ளிகள் கொண்ட வெள்ளை மற்றும் சாம்பல் நிற ரோமங்கள் இருக்கும். தடிமனான இரட்டை அடுக்கு கோட் போன்ற அமைப்பு உடலை மூடியுள்ளன. ரோமங்களால் மூடப்பட்ட பெரிய பாதங்கள் ஸ்னோ ஷூக்களைப் போல செயல்படும். சமநிலைக்கு உதவும் நீண்ட வால் குளிருக்கு இதமாக, உடலைச் சுற்றி போர்த்தும்போது வெதுவெதுப்பாக உணரும்.

வால்: இவற்றின் வால் அடர்த்தியான ரோமத்தை கொண்டுள்ளது. கடுமையான வானிலையில் இருந்து பாதுகாக்க இது உதவுகின்றது. வால் அவற்றின் முழு உடலைப் போலவே நீளமாக இருக்கும். இவற்றின் வயிற்றில் உள்ள ரோமங்கள் கிட்டதட்ட ஐந்து அங்குல தடிமன் கொண்டது. இது கடுமையான பனி மற்றும் குளிர்ந்த மலை தட்பவெப்ப நிலைகளில் உயிர் வாழ உதவுகின்றன.

உணவு முறை: இவை மாமிச உண்ணிகள். நீல செம்மறி ஆடு, ஐபெக்ஸ் மற்றும் பல்வேறு வகையான கால்நடைகளையும் பாலூட்டிகளையும் வேட்டையாடி உண்ணுகின்றன. விடியற்காலை மற்றும் அந்தி நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இவை இருக்கும். அந்த நேரத்தில் வேட்டையாடும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் காலணிகள் பராமரிப்பின் அவசியம்!
International Snow Leopard Day

தனித்துவமான வேட்டை உத்தி: இவற்றுக்கு தனித்துவமான வேட்டை உத்தி உண்டு. மற்ற சிறுத்தைகளைப் போல அல்லாமல் இவை அதிக தூரம் குதிக்கும் திறன் உடையவை. அவற்றின் நீளத்தை விட ஆறு மடங்கு வரை இவை பாய்ந்து குதிக்கும் திறமை வாய்ந்தவை. ஒரு பாறையில் இருந்து இன்னொரு பாறைக்கு பாய்ந்து தாவிச் சென்று இரையைப் பிடிக்கிறது. இவற்றால் தங்கள் உடல் எடையை விட மூன்று மடங்கு அதிக எடை உள்ள விலங்குகளை வேட்டையாட முடியும்.

கலாசார முக்கியத்துவம்: பல கலாசாரங்களில் பனிச் சிறுத்தைகள் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. உள்ளூர் சமூகங்களின் புராணங்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அழியும் நிலை: இந்த அபூர்வ பனிச் சிறுத்தைகள் தற்போது அழியும் நிலையில் உள்ளன. காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் மாற்றத்தால் வாழ்விட அழிவு, எதிரிகளின் தாக்குதல், வசிப்பிட இழப்பு, மேய்ப்பர்களால் பழிவாங்கப்பட்டு வேட்டையாடப்படுதல் போன்ற உயிர் வாழ்வதற்கான முக்கியமான அச்சுறுத்தல்களை இவை எதிர்கொள்கின்றன. இந்த விலங்குகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு வசீகரத்தை அளிக்கின்றன. இவற்றின் பாதுகாப்பு முயற்சிகளை வலிமைப்படுத்தி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் கருதியே ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 23 அன்று சர்வதேச பனிச்சிறுத்தைகள் தினம்அனுசரிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com