சைஸை பார்த்து எடை போடாதீங்க! சிங்கத்தையே முறைக்கும் இந்த 'குள்ள' நாயின் பின்னணி என்ன?

Chihuahua Dogs
Chihuahua Dogs
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on: 

சிகுவாஹுவாஸ் (chihuahua dog) என்ற ஒரு நாய் இனம் உலகத்திலேயே மிகவும் பொடியான நாயினமாக கருதப்படுகிறது. இந்த நாய்களின் பிறப்பிடம் மெக்சிகோவில் உள்ள சிகுமா ஹுவாஸ் என்ற பகுதியாகும்.

இந்தவகை நாய்கள் தோன்றிய இடத்தேயே இதற்கு பெயராக வைத்துவிட்டார்கள். இந்த வகை நாயின் சைஸை பற்றி தெரிந்து கொண்டால் அசந்து போய்விடுவீர்கள். இதன் அதிகபட்ச உயரம் எட்டே அங்குலம்தான். எடையோ இரண்டிலிருந்து ஆறு பவுண்டுகள்தான். வளர்ந்த இந்த நாயே இப்படி என்றால் அதன் குட்டிகள் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். பிறக்கும்போது ஒரு தவளை அளவுதான் இருக்கும் போல.

ஆப்பிள் வடிவத்தில் முகமும் பேசும் பெரிய கண்களும் குத்திட்டு நிற்கும் காதுகளும் உடைய இந்த நாய்கள் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்து விடுகின்றன. இவைகளின் சருமம் இந்த நிறம்தான் என்றில்லாமல் பலவகை நிற சாயல்களில் அமைந்துள்ளது. தோற்றத்தில் குள்ளமாக இருந்தாலும் உள்ளுக்குள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவை. இவ்வகை நாய்களின் விஸ்வாச தன்மை மற்ற நாய்களின் நன்றியுடைமைக்கு சற்றும் குறைந்ததில்லை. கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது என்ற பழமொழி இவனுக்கு பொருந்தாது.

குள்ளம்தான் இவன். ஆனால் வீரத்திற்கு பேர் போனவன். தன்னை யாரும் தன்னை குள்ளம்தான் இவன் என்று தாழ்வாக கருத அனுமதிக்க மாட்டான். பழகுவதற்கு நல்ல தோழன்தான். இருந்தாலும் தனக்கு ஆபத்து விளைவிப்பவர்கள் என்று நினைத்தால் வள்ளென்று விழுந்து சள் என்று கடித்தும் விடுவான்.

மிகவும் நொல்பமான உடம்புடையவன் என்பதால் இவனை மிகவும் எச்சரிக்கையோடு கையாளவேண்டும். சொல்லப்போனால் இவ்வகை நாய்களை ஒரு கை குழந்தையை போல கருதவேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இரைச்சலில்லா உலகம் கேட்போம்!
Chihuahua Dogs

எல்லாவற்றயும் விட இந்த வகை நாய்களை பற்றிய ஒரு அசத்தல் விஷயம் என்னவென்றால் இவைகளின் மூளையின் எடையும் அளவும் இவைகளின் மொத்த உடல் அளவு எடையோடு ஒப்பிட்டால் சதவிகிதத்தில் மிகவும் அதிகம். அதாவது இதன் எடைக்கும் மூளையின் எடைக்கும் இருக்கும் விகிதாச்சாரம் மிகவும் அதிகம்.

logo
Kalki Online
kalkionline.com