காலநிலை மாற்றமும், மனிதர்களின் நிலையும்!

Climate change and the human condition!
Climate change and the human condition!
Published on

மது பூமி கிரகத்தின் சமநிலையை மாற்றும் காரணிகளில் காலநிலை மாற்றம் என்பது மறுக்க முடியாத சக்தியாக உருவெடுத்து, சுற்றுச்சூழல் அமைப்புகளை முற்றிலுமாக மாற்றி, மனித சமுதாயத்தை மோசமான நிலைக்குக் கொண்டு செல்கிறது. வெப்பமயமாதல் பிரச்னையால் இந்த உலகமும், அதில் வாழும் விலங்குகள், மனிதர்கள் என அனைவருமே பாதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக, இதனால் மனிதர்களுக்கு எதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்தப் பதிவு மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். காலநிலை மாற்றம் தற்போது தீவிரமடைவதால் மனித சமுதாயத்தில் அதன் தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கிவிட்டது. இதனால் நம்முடைய உணவு பாதுகாப்பு முதல் பொது சுகாதாரம் வரை அனைத்துமே பாதிக்கப்படுகிறது.

தீவிர வானிலை நிகழ்வுகள்: சூறாவளி, வறட்சி மற்றும் காட்டுத் தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்வுகள் மனித சமூகத்தை ஆபத்தில் தள்ளுகிறது. இதனால் இடப்பெயர்ச்சி, வீடுகளை இழத்தல் மற்றும் சில சமயங்களில் பல உயிர்கள் போவதற்கும் வழி வகுக்கும்.

உணவுப் பாதுகாப்பின்மை: வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்களால், விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டு, உணவு உற்பத்தி மோசமடைகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் வெள்ளம் போன்றவற்றால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு சவால்களை சந்திக்கவேண்டி உள்ளது. எனவே, இது மக்களுக்கு உணவு பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
மழை நீரில் அதிகமாகக் கரையும் மண்ணின் சத்துக்கள்: தடுக்க என்ன செய்ய வேண்டும்?
Climate change and the human condition!

தண்ணீர் பற்றாக்குறை: முறையின்றி பெய்யும் மழைகள் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக சில இடங்களில் தண்ணீர் விரைவில் ஆவியாகிவிடுவதால், மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். இதனால் பனிப்பாறைகள் உருகுவது அதிகமாகி, விவசாயத்திற்கான நன்னீர் வளங்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும்.

சுகாதார அபாயங்கள்: மாறிவரும் தட்பவெட்ப நிலைகளால் தொற்று நோய் பரவல்கள் அதிகரித்து, பொது சுகாதாரத்தை அச்சுறுத்தும். மேலும், இதனால் கொசு போன்றவை அதிகமாக பரவி, நோய் மேலும் பரவுவதை அதிகரிக்கிறது.

இதுபோன்று நாம் எதிர்பார்க்காத பல பாதிப்புகள் காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இது எதுவுமே உடனடியாக நடக்காது என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக நமக்கே தெரியாமல் இதன் பாதிப்புகளை நாம் அனுபவிப்போம். காலநிலை மாற்றத்தை சாதாரணமாக நினைத்து புறம் தள்ளினால், அது கொஞ்சம் கொஞ்சமாக மனித குலத்திற்கு பெரும் பிரச்னையாக மாறிவிடும்.

எனவே, இப்போதே இதற்கான பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் செயல்களில் மக்களும் அரசாங்கமும் ஈடுபட வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com