காலநிலை மாற்றத்தால் தேயிலை விளைச்சல் குறைவு!

காலநிலை மாற்றத்தால் தேயிலை விளைச்சல் குறைவு!
Published on

ந்தியாவின் முக்கியமான ஏற்றுமதி விளைபொருட்களில் ஒன்றாக உள்ளது தேயிலை. நடப்பு ஆண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் தேயிலை விளைச்சல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது என்று தேசிய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு வகையான விவசாய விளைப்பொருட்கள் பயிரிடப்படுகின்றன. அவற்றில் தேயிலையும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தேசிய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில், ‘இந்திய வேளாண்மை தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது. இதனால் பல்வேறு வகையான விளைப்பொருட்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதுவே விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது தேயிலையின் உற்பத்தியும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது.

இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற மலைப்பிரதேச மாநிலங்களில் அதிக அளவில் தேயிலை பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேயிலை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது பூச்சி தாக்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக மிகப்பெரிய அளவில் தேயிலை விளைச்சல் சரிவை சந்தித்து இருக்கிறது. இதனால் தேயிலை பயிரிட்ட சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் மற்றும் பண்ணை நிறுவன விவசாயிகள் பலரும் பெரும் பாதிப்பைச் சந்தித்து இருக்கின்றனர்.

குறிப்பாக, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் தேயிலை உற்பத்தி 18.85 கோடி கிலோவாக இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டின் அதே மாதத்தில் 17.80 கோடி கிலோவாக குறைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் தேயிலை விளைச்சல் சிறுகச் சிறுக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது விவசாயிகளுக்கு தேயிலைக்கான நிலையான கொள்முதல் விலை சென்றடைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com