கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மீன் இனம், சராசரியாக டைனோசர் அழிந்த காலக்கட்டத்திலேயே அழிந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், கடந்த 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் சோட்வானா பே என்ற கடலில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு 4 புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுக்க தென் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். அப்போது Laurent Ballesta என்பவர் சோட்வானா பே கடலுக்குள் டைவிங் செய்திருக்கிறார். அப்போதுதான் அந்த உயிரினத்தைக் கண்ணுக்கு எதிரே கண்டு பேரதிர்ச்சியில் மூழ்கினார்.
கிட்டத்தட்ட டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில், இந்த மீன் வகை உயிரினம் அதிக அளவில் உலகம் முழுவதும் காணப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது சரியாக 410 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இரு இரட்டை துடுப்புகளைக் கொண்ட மீன் குடும்பத்தைச் சார்ந்ததாக இருந்துள்ளது. அந்த நான்கு துடுப்புகளுமே மிகவும் வலிமையானவையாகும். அதேபோல் 390 முதல் 360 மில்லியன் ஆண்டுகளின் இடைக்காலத்தில், அவை கடலிலிருந்து வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இது ஒரு Tetropods என்றும் கூறப்படுகிறது. அதாவது, நான்கு கால்கள் ( மீனுக்கு துடுப்புகள்) கொண்ட உயிரினங்களிலிருந்து இரண்டு கால், கைகள் கொண்ட உயிரனங்களாக மாறுவது. உதாரணத்திற்கு, பாம்புகள், பாலூட்டிகள், பறவைகள், மனிதர்கள்.
இன்னும் சொல்லப்போனால், மீன் இனத்திலேயே இந்த உயிரினத்திற்கும், இரண்டு கால் உயிரினங்களுக்கும் தான் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையால், கடலிலிருந்து வெளியேறிய இந்த மீன்களே, பிற்பாடு பறவைகளாகவும், விலங்குகளாகவும் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
உயிர் வாழும் படிமமாகக் கருதப்படும் ஒரு மீன் வகையைச் சேர்ந்த இந்த உயிரனத்தின் பெயர் Coelacanth ஆகும். இதனை 2010ம் ஆண்டு கண்டுப்பிடித்தப் பின்னரே, இந்த உயிரினம் இன்னும் அழியவில்லை என்பது உறுதியானது. அதேபோல், இவை கடலின் மிக ஆழத்தில் மட்டுமே வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது இவை 300மீ ஆழத்தில் இருக்கின்றன.
இரவில் அந்த மீன் இரையை தேடிச் செல்லும்போதுதான் புகைப்பட கலைஞர் Ballesta அதனைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “அழிந்த மீனை மட்டும் நாம் கண்டுபிடிக்கவில்லை. இது பரிணாம வளர்ச்சியின் வரலாற்றின் தலைசிறந்த கண்டுபிடிப்பாகும்.” என்று கூறினார்.
கடந்த 1938ம் ஆண்டு இந்த மீன் வாழ்ந்ததற்கான அடையாளம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், 1975ம் ஆண்டும் பல அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஏறதாழ 2 மீட்டர் நீளமும் 90 கிலோ எடையும் கொண்ட இந்த மீனின் அடையாளங்கள் கிடைத்தன. ஆனால், பல வருடங்களுக்கு பிறகு அந்த மீனே கிடைத்தது என்றால், அதனைப் பார்த்தவருக்கு எப்படியிருக்கும்? அதாவது டைனோசரை நேரில் பார்த்தால் எப்படி இருந்திருக்குமோ? அதே மாதிரிதான் இருந்திருக்கும்.