டைனோசர்களை அழித்த எரிக்கல்… மனிதர்கள் தப்பிப்பார்களா? 

Asteroid
Asteroid
Published on

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் சிறுகோள் பூமியை தாக்கி டைனோசர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களை அழித்தது. இந்த நிகழ்வு பூமியின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இன்றைய மனிதர்கள் அந்த காலத்தில் இல்லை என்றாலும், இதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நிகழ்ந்தால் மனித இனம் எவ்வாறு பாதிக்கப்படும்? டைனோசர்களைப் போல அழிந்து போகுமா? வாருங்கள் இந்தப் பதிவில் அதற்கான விடையைத் தேடி கொஞ்சம் பயணிப்போம். 

டைனோசர்களை முற்றிலுமாக அழித்த சிறுகோள் மிகப்பெரிய அளவில் இருந்தது. இது பூமியில் மோதியபோது ஏற்பட்ட வெடிப்பு பல மைல் உயரத்திற்கு தூசியையும், சாம்பலையும் வளிமண்டலத்தில் பரப்பியது. இதன் விளைவாக சூரிய ஒளி பூமியில் நுழைய முடியாமல் பூமி முழுமையாக உறைந்து போனது. இதனால், பல தாவரங்கள் அழிந்து போயின. தாவரங்களை உண்ணும் தாவர வகை உயிரினங்களும் இறந்ததால், அவற்றை உண்ணும் மாமிச உண்ணிகளும் இறந்தன. இதனால் உலகம் பெரும் அழிவை சந்தித்தது. 

இன்றைய மனிதர்கள் டைனோசர்களை விட மிகவும் மேம்பட்டவர்கள். பூமியை ஒரு எரிக்கல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே நாம் அறிந்து விடுவோம். நாம் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள காரணத்தால், சிறுகோளின் தாக்குதல் பற்றி நமக்கு நன்கு தெரியும். மேலும், சிறு கோள்களை கண்காணிக்கவும் அவற்றின் பாதையை கணிக்கவும் நம்மிடம் தொழில்நுட்பங்கள் உள்ளன. சிறுகோள் பூமியில் மோதுவது அபாயகரமானதாக இருந்தாலும், அதைத் தடுக்கவோ அல்லது அதன் தாக்கத்தைக் குறைக்கவோ மனிதர்களால் நடவடிக்கை எடுக்க முடியும். 

சிறுகோள் பூமியில் மோதுவதைத் தடுக்க பல வழிகள் உள்ளன. உதாரணத்திற்கு திரைப்படங்களில் காட்டுவது போல சிறுகோளின் பாதையை மாற்றலாம். அல்லது சிறுகோளின் மீது ஒரு விண்கலத்தை மோதவிட்டு அதன் திசையை மாற்றலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு நமக்கு நிறைய நேரம் தேவைப்படும். எனவே, சிறுக்கோள் மோதலின் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியம். 

இதையும் படியுங்கள்:
ஒரு 5 Seconds பூமி சுற்றவில்லை என்றால் என்ன ஆகும்?
Asteroid

சிறுகோள் பூமியில் மோதி அழிவை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், அதன் தாக்கத்தைக் குறைக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும். உதாரணமாக, நிலத்தடி பதுங்கு குழிகள் கட்டுவது, அவசரத் தேவைக்காக உணவு மற்றும் தண்ணீரை சேமித்து வைப்பது போன்ற நடவடிக்கைகள் மனித இனம் சிறுகோள் மோதலைத் தாக்குப்பிடிக்க உதவும். 

டைனோசர்களை முற்றிலுமாக அழித்த எரிக்கல் மோதல் மனித இனத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். இதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நிகழக்கூடும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே, அவற்றின் மோதலின் அபாயத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு அதற்குத் தயாராக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறுகோள் தாக்கத்தில் இருந்து மனித இனத்தை பாதுகாக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com