நமது பூமி எவ்வளவு வேகத்தில் சுழல்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை வெறும் 5 வினாடிகளுக்கு இந்த பூமி சூழ்ல்வதை நிறுத்தினால் என்ன ஆகும்? இதெல்லாம் சாத்தியமில்லாதது போல உங்களுக்குத் தோன்றினாலும், ஐந்து வினாடிகளுக்கு பூமி சுழல்வது நின்றால் என்ன ஆகும் என்பதனை கற்பனையாக சிந்தித்து, அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்னவாக இருக்கும் என்பதை இப்பதிவின் மூலம் ஆராய்வோம்.
முதலில் பூமியின் சுழற்சி என்பது நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே இரவு பகலை உருவாக்குகிறது, நமது கிரகத்தின் காலநிலை முறைகளை நிர்ணயம் செய்கிறது, கடல் நீரோட்டங்களை நிர்வகிக்கிறது. எனவே, பூமி திடீரென சுழல்வதை நிறுத்துவது சாதாரணமாகத் தோன்றினாலும், நீங்கள் நினைப்பதை விட அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.
பூமி திடீரென சுழல்வதை நிறுத்தும் போது, வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது நீங்கள் சடன் பிரேக் போட்டால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். நமது கிரகம் பூமத்திய ரேகையில் சுமார் மணிக்கு 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுழல்கிறது. இது உடனடியாக நிற்கும்போது, பூமியில் உள்ள அனைத்தும் தூக்கி வீசப்படும்.
அத்துடன் பூமியின் சுழற்சியின் திடீர் மாற்றம் காரணமாக கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் வானிலை அமைப்புகள் பேரழிவை சந்திக்கும். தற்போது பூமியின் சுழற்சிக்கு ஏற்றார் போல வளிமண்டலமும் நகர்ந்து கொண்டே இருக்கும். எனவே பூமி தன் சுழற்சியை நிறுத்தினால், அதன் விளைவாக சூறாவளியை விட அதிக சக்தி கொண்ட காற்று வீசி, பூமியில் உள்ள அனைத்தையும் அழித்துவிடும்.
பூமியின் சுழற்சி நிற்கும்போது அதன் ஈர்ப்பு விசையின் சமநிலை பாதிக்கப்படும். தற்போது பூமியின் சுழற்சியால் ஏற்படும் மைய விளக்கு விசையானது, அதன் ஈர்ப்பு விசையை எதிர்க்கிறது. ஒருவேளை பூமியின் சுழற்சி நின்றுவிட்டால், புவியீர்ப்பு விசையால் சூரியனை நோக்கி பூமி வேகமாக இழுக்கப்படும்.
பூமியின் சுழற்சி நிற்க வாய்ப்புள்ளதா?
இதற்கு சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இல்லை என்பதே பதில். நியூட்டனின் முதல் விதிப்படி, பூமியின் மீது எந்த வெளிப்புற ஆற்றலும் செயல்படாத வரை அது தொடர்ந்து சூழலும். பூமியின் சுழற்சி தானாக நிறுத்தப்படுவது முற்றிலும் கற்பனையானது. இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை.