‘மோசமான காற்று மாசுபாடு கொண்ட பகுதி’ என்ற தரக் குறியீட்டைப் பெற்ற டெல்லி!

‘மோசமான காற்று மாசுபாடு கொண்ட பகுதி’ என்ற தரக் குறியீட்டைப் பெற்ற டெல்லி!

ந்தியத் தலைநகர் டெல்லி அதிக அளவிலான மக்கள் தொகை, போக்குவரத்து, தொழில் நிறுவனங்கள், குறுகிய பரப்பில் அதிக அளவிலான செயல்பாடுகளை கொண்டு இயங்கி வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் காற்று மாசுபாடு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரம் அடைந்து வருவதாக காற்று மாசுபாட்டை ஆய்வு செய்துவரும் சபர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக சபர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியான் தலைநகர் டெல்லி எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய மிக முக்கிய நகரம். குறுகிய பரப்பில் அதிக அளவிலான மக்கள், போக்குவரத்து இயந்திரங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு விதமான பயன்பாடுகள் என்று டெல்லியினுடைய அன்றாட செயல்பாடு மற்றும் இயற்கை காரணிகள் ஆகியவை டெல்லியின் காற்று மாசுபாடை அதிகரிக்கச் செய்ய முக்கியமான காரணமாக இருக்கிறது.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடால் மனிதர்கள் மட்டுமின்றி, பல்வேறு வகையான பறவைகள், விலங்குகள் மற்ற வகை உயிரினங்களும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மனிதர்களுக்கு மூச்சுத் திணறல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, இருமல் போன்ற பல்வேறு விதமான நோய்கள் எளிதில் ஏற்படுகின்றன. மேலும், குழந்தைகள், பெரியவர்கள் இதனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இது மட்டுமல்லாது டெல்லியின் இயற்கை சூழல் பெருமளவில் மாறுபாட்டை கண்டு வருகிறது. அளவுக்கு அதிகமான மழை, வெயில், அளவுக்கு அதிகமான பனி, நிலத்தினுடைய சூடு அதிகரிப்பு என்று டெல்லியின் தட்பவெட்ப நிலை மாற்றத்தைக் கண்டு இருக்கிறது.

டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை 83 என்ற அளவில் காற்று மாசுபாடு தரக் குறியீடு இருந்தது. வியாழக்கிழமை 133 என்ற தரக் குறியீடு காணப்பட்டது. 21ஆம் தேதி அன்று அதே பகுதியில் 173 என்று காற்று மாசுபாடு தரக்குறியீடு காணப்பட்டது. ஒட்டுமொத்த டெல்லியின் தரக் குறியீடு 266 முதல் 360 வரை உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, ஆனந்த் விஹார் பகுதியில் காற்று மாசுபாடு தரக் குறியீடு 345 என்றும், ஐடிஓ பகுதியில் 309 என்றும், நியூ மோதி பார்க் பகுதியில் 360 என்றும் காற்று மாசுபாடு காணப்படுகிறது.

இவ்வளவு அதிகமாக காற்று மாசு உயர்ந்திருப்பதால் அவற்றை பொதுமக்கள் நேரடியாகவே கண் வழியாகவே பார்த்து உணர முடியும் என்று தெரிவிக்கின்றனர். மேலும், பொதுமக்கள் முகக் கவசம் பயன்படுத்துவதை அதிகப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com