Red hairy caterpillar என்ற கம்பளிப்பூச்சிகள் நிறைய சேர்ந்து ஒரு தண்டவாளத்தைக் கடக்கும்போதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆம்! இந்தச் சம்பவம் எப்போது எப்படி நடந்தது என்பதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாக இந்த Red hairy caterpillar என்றக் கம்பளிப்பூச்சிகள் அதிகமாக வேர்க்கடலைச் செடிகளில்தான் இருக்கும். இந்த வகையான கம்பளிப்பூச்சிகள் இனப்பெருக்கக் காலத்தில் ஒரு இடத்தில் ஒன்றாகக் கூடும் குணாதிசயத்தைக் கொண்டது. அப்போதுதான் ஒருமுறை தமிழ்நாட்டில் சோலவந்தான் என்ற இடத்தின் அருகே இருந்த ரயில் தண்டவாளத்தில் கூடியுள்ளது.
அந்தவழியாக வந்த மதுரை பாண்டியன் அதிவிரைவு ரயில் அங்குக் கூடியிருந்த அனைத்து கம்பளிப்பூச்சிகள் மீதும் ஏறிச் சென்றது. அப்போது அந்த பூச்சிகளின் உடலிலிருந்து வெளியேறிய திரவம் ஒரு தண்டவாளம் முழுவதும் பிசுபிசுப்பாகப் பரவியது. பாண்டியன் ரயிலின் சக்கரங்கள் சுற்றிக் கொண்டிருந்தாலும் ரயில் கொஞ்சம் கூட நகரவே இல்லை. அதே இடத்தில் தான் இருந்தது.
அதற்குக் காரணம் அந்த கம்பளிப்பூச்சிகளின் உடலில் இருந்து வெளியேறிய அந்த திரவம்தான். அதன்பின்னர் ரயில்வே அதிகாரிகள் வந்துப் பார்த்தபோதுதான் விஷயம் தெரியவந்தது.
பிறகு ரயில் எப்படிதான் மீண்டும் ஓடியது என்ற சந்தேகம் அனைவருக்கும் கண்டிப்பாக எழும். ஆம்! பின்னர் பூச்சியியல் நிபுணர்கள் வந்து ஒரு திரவத்தை செலுத்திப் பூச்சிகளின் திரவத்தை அப்புறப்படுத்திய பிறகுதான் ரயில் மீண்டும் ஓடியது. இதுதான் முதல்முறையா என்று கேட்டால்? அதுதான் இல்லை.
கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வட சீனாவிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆம்! ரயில்வே அதிகாரிகள் கொடுத்த செய்தியில் இதனைப்பற்றிய முழு தகவலும் தெரியவந்தது. அதாவது ஒரு சரக்கு ரயில் சீனாவின் மங்கோலியா பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது உணவு சாப்பிட்டுவிட்டுத் திரும்பி அந்த தண்டவாளத்தைக் கடந்து சென்ற கம்பளிப்பூச்சிகளின் மீது ரயில் ஏறியது.
அதன்பின்னர் மூன்று மணி நேரமாக ரயிலை எடுக்கவே முடியவில்லை. ஒரு கிமீ அளவு தூரம் வரைப் பரவியிருந்த அந்த கம்பளிப்பூச்சிகளின் திரவத்தை நீக்க 15க்கும் மேற்பட்டவர்கள் வந்து சுத்தம் செய்தனர். அதன்பின்னரே சரக்கு ரயில் எடுக்கப்பட்டது.
அதேபோல் 2013ம் ஆண்டு நியூசிலாந்திலும் இதுப்போன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.