மனதை மயக்கும் 8 வித பட்டாம்பூச்சி லார்வாக்கள் பற்றி தெரியுமா?

Mind-blowing butterfly larvae
Butterfly larvae
Published on

லகம் முழுக்க பல வகையான வண்ணமும் டிசைன்களும் கொண்ட பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்தபடி உள்ளன. இவற்றின் அழகில் மயங்காதவர் வெகு சிலரே எனலாம். பட்டாம்பூச்சியின் லைஃப் சைக்கிள் நான்கு நிலைகளைக் கொண்டது. முதல் நிலை முட்டை. முட்டைகளிலிருந்து லார்வாக்கள் வெளிவரும். அவை வளர்ந்து, பின் தன்னைச் சுற்றிலும் பியூபா (Pupa) எனப்படும் ஒரு வகையான கூட்டைக் கட்டிக்கொண்டு சில காலம் உள்ளே இருக்கும். பிறகு வண்ணத்துப் பூச்சியாக உருமாறி வெளிவரும். அழகு மிக்க எட்டு வகை லார்வாக்கள் (Caterpillars) பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

1. லூனா மோத் லார்வா: வெளிர் பச்சை நிறத்தில் கொழு கொழு உடலமைப்புடன் காணப்படும் இந்த லார்வா, இரவு நேரங்களில் வெளியில் திரியும். இயற்கையின் அற்புதமான படைப்புகளில் இதுவும் ஒன்று.

இதையும் படியுங்கள்:
பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க விவசாயிகள் செய்ய வேண்டியவை!
Mind-blowing butterfly larvae

2. பஸ் (Puss) மோத்: கூரிய முட்கள் போன்ற அமைப்பை உடலில் கொண்டு, சிறிய அளவிலான டிராகன் போன்று தோற்றமளிக்கும் இந்த லார்வா, பிறகு மென்மையான வெல்வெட் போன்ற உடலமைப்புடன், அனைவரும் வியக்கும் அழகான பட்டாம்பூச்சியாக வெளிவரும்.

3. ஜுவெல் கேட்டர்பில்லர்: ஒளி ஊடுருவும் வகையிலான கண்ணாடியில் உயிரோட்டம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உருவம் போல் மிளிரும் இந்த லார்வா.

4. செக்ரோப்பியா (Cecropia) மோத் லார்வா: பச்சை நிறத்தில், உடலில் குமிழ் போன்ற அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வட அமெரிக்காவின் மிகப் பெரிய அளவு கொண்ட பட்டாம்பூச்சியாக வெளிவரும் லார்வா இது.

5. ஹிக்கரி ஹார்ன்ட் டெவில்: பயங்கரமான கொம்புகளுடன் தோற்றமளிக்கும் இந்த லார்வா அரக்கன் போல் இருந்தாலும், தீங்கற்றது. அதன் அழகிற்காக விரும்பப்படும் கம்பீரமான பட்டாம்பூச்சியாக வெளிவரும்.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்: மகரந்தச் சேர்க்கை பாதிப்பால் குறையும் விவசாய உற்பத்தி!
Mind-blowing butterfly larvae

6. மோனார்க் லார்வா: கவர்ச்சிகரமான மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை நிறக் கோடுகளை இவை உடலில் கொண்டிருக்கும். உலகப் புகழ் பெற்ற மோனார்க் வண்ணத்துப் பூச்சியாக வெளிவரும் லார்வா.

7. சேடில் பேக் (saddle back) லார்வா: இந்த சிறிய சைஸ் லார்வா தனது முதுகில் பளிச்சென்ற பச்சை நிறத்தில் சேணம் போன்ற திட்டு உடையது. இந்த தெளிவான அமைப்பு எதிரிகளை விரட்டியடிக்க உதவுகிறது.

8. மில்க்வீட் டைகர் மோத் லார்வா:  மென்மையான, தங்கம்போல் மின்னும் ஆரஞ்சு நிற முடிகள் உடையது இந்த லார்வா. சூரிய ஒளியில் பளபளக்கும் இது, பின் நாளில் நேர்த்தியான மில்க்வீட் டைகர் மோத்தாக வெளிவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com