கடலில் பல மாதங்களாக சென்று கொண்டு இருக்கும் சரக்கு கப்பல் ஆனாலும் சரி, பயணிகள் கப்பல் ஆனாலும் சரி, அதில் சேரும் கழிவுகளை எவ்வாறு நீக்குகிறார்கள்? பொதுவாக கப்பல்களில் மனித கழிவுகள், எண்ணெய் கழிவுகள், பிளாஸ்டிக் அட்டை போன்ற கழிவுகள், குளிக்கும் நீர் சோப்பு கழிவுகள், ஸ்விம்மிங் ஃபூல் கழிவுகள் இப்படி எண்ணற்ற கழிவுகள் சேர்ந்து கொண்டிருக்கும்.
இதனை எவ்வாறு அப்புறப்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி. I.M.O. எனப்படும் சர்வதேச கடல் சார் அமைப்பு என்ற நிறுவனம் இதனை கண்காணிக்கிறது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. சரி சற்று விரிவாக பார்ப்போம்.
கடலில் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அதனால் கடல் நீரும் மாசு படக்கூடாது என்பதில் இந்த நிறுவனம் உறுதியாக உள்ளது. பொதுவாக 2000 முதல் 7000 பேர் வரை பயணம் செய்யக்கூடிய அளவில் கப்பல்கள் செயல்படுகின்றன.
இவர்களுக்கு வேண்டிய குடிநீரை கடலில் இருந்தே எடுத்து சுத்தப்படுத்தி அதை குடிநீராக மாற்றுகிறார்கள். மேலும் பல மாதங்களாக செல்லும் கப்பல்களில் தேவையான மின்சாரத்தை பெரிய ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்கிறார்கள். கடல் நீரை சவ்வூடு பரவுதல் மற்றும் ஆவியாதல் மூலம் சுத்தமான குடிநீராக மாற்றுகிறார்கள். எனவே எல்லா கப்பல்களிலும் சேரும் கழிவுகளை வெளியேற்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது ஐஎம்ஓ விதி.
இதில் எந்த மாற்றமும் கிடையாது. சமையலறை குளியலறை கழிவறை இவற்றில் சேரும் கழிவுகளை சுத்தம் செய்து 12 கடல் மைல் தூரத்தில் அப்புறப்படுத்துகிறார்கள். சாம்பல் நிறக் கழிவுகளை நாலு கடல் மைல் தூரத்தில் சுத்திகரிப்பின் மூலம் அப்புறப்படுத்துகிறார்கள். எண்ணெய் கழிவு கடலில் எரிக்கப்படுகிறது. திடப் பொருளாக இருந்தால் சேர்த்து வைத்து கரையில் கொண்டு சேர்க்கப்படும். சில வேண்டாத உணவுகளை கடல் மீன்களுக்கு இரையாக போடுகிறார்கள். ஐ எம் ஓ விதிகளின்படி துண்டான உணவுகளை மூன்று கடல் மைல் தொலைவில் கொட்ட வேண்டும்.
இப்படி ஒவ்வொரு கழிவுகளையும் ஒரு குறிப்பிட்ட கடல் மைல் தொலைவில் தான் கொட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி கப்பல் நிறுவனம் செயல்படுகிறது. கண்ணாடி பொருட்கள் அட்டைகள் பிளாஸ்டிக் கழிவுகள் ஹைட்ராலிக் மெஷின் மூலம் நொறுக்கப்பட்டு பெரிய பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கிறார்கள். ஒவ்வொரு பையும் சுமார் ஒரு டன் எடை இருக்கும் வகையில் கட்டப்படுகிறது.
மறுசுழற்சிக்கு கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள் எரித்து சாம்பலாக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கப்பலான ராயல் கரீபியன் கப்பல் சுமார் 7000 பயணிகளை சுமந்து செல்கிறது. சில கழிவுகள் கனடிய கடல் பகுதியில் வெளியேற்றப்படுகின்றன.
கடல் வாழ் உயிரினங்கள் மாசுபடாத வகையில் கப்பல் உரிமையாளர்கள், கடற்படையினர், துறைமுக அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். இவ்வாறாக சர்வதேச கடல்சார் அமைப்பு என்ற ஐஎம்ஓ படி ஒவ்வொரு கழிவுகளும் சுத்திகரிக்கப்பட்டு ஒவ்வொரு கடல் மைல் தொலைவில் வெளியேற்றப்படுகிறது.