
கோழியில் வெள்ளை, சிகப்பு, பழுப்பு என பார்த்திருப்போம். இதன் இறைச்சி சிவந்த நிறம் கொண்டது. முட்டைகளோ வெள்ளையாகத்தான் பெரும்பாலும் இருக்கும். நாட்டுக் கோழி முட்டைகள் பழுப்பு நிறமாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கும். சத்து மிகுந்த இக்கோழி இறைச்சி, முட்டை போலவே கருங்கோழி வகைகள் உள்ளன.
இந்த வகை கோழியின் பெயர் கடக்நாத். இந்தியாவின் உள்ளூர் கோழிகளில் ஒன்று. இதற்கு கருப்பு கால், கருப்பு மூக்கு, கருப்பு சதை, கருப்பு எலும்புகள் அத்துடன் முட்டை கூட கருப்பு தான். நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள தண்டேவாடா பகுதியை சேர்ந்தது கடக்நாத் வகை கோழிகள்.
இத்துடன் மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மற்றும் தார் பகுதிகளில் காணப்படுகின்றன. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன.
தண்டேவாடா பகுதியில் இந்த கோழியின் பெயர் காலிமாசி. இதன் பெண் கோழி வருடத்திற்கு 80முட்டைகள் வரை இடும். தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூர், வேலூரில் பண்ணை அமைத்து வளர்க்கின்றனர். இக்கோழியின் இறைச்சி மணமாகவும், ருசியாகவும் இருக்கும். இதன் முட்டை ரொம்ப மிகவும் சத்து வாய்ந்தது.
மருத்துவ குணம் கொண்டது. இந்த கோழியின் கறி அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு கருப்பு கோழி இறைச்சியை பரிந்துரைக்கின்றனர்.
சித்த மருத்துவத்தில் குஷ்டம்,காணாக்கடி,சிரங்கு,வாத நோய்கள் பலவற்றிற்கும் கருப்பு கோழி இறைச்சியை பரிந்துரைக்கின்றனர். இதில் மற்ற கோழி இறைச்சியை விட கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. இந்த கோழியை வளர்க்க அரசு 90சதவீதம் வரை நிதி உதவி அளிக்கிறது.
நன்கு வளர்ந்த கடக்நாத் கோழியின் எடை 2கி இருக்கும். பாஸ்டர் பகுதியில் உள்ளூர் மார்க்கெட்டில் ரூபாய் 500முதல் 700 வரை விலை போகிறது.1000 கோழிகள் வளர்த்தால் 5முதல் 7லட்சம் வரை சம்பாதிக்கலாம்.