
சில உயிரினங்களுக்கு வால்கள் அவைகளை தற்கொத்துக்கொள்ள உதவும். தங்களை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளவும் மற்றும் மற்ற இனத்தை ஈர்க்கவும் இந்த வித்தியாசமான வால் அமைப்பு உதவியாக இருக்கிறது.
சிறுத்தை
இதன் நீண்ட வால் தட்டையாகவும் எப்போதும் சுழற்றிக் கொண்டு இருக்கும். இது மிக வேகமாக ஓடுவதற்கு இதன் வால் உபயோகமாக உள்ளது. எந்தத் திருப்பங்களிலும் இது பாலன்ஸ் தவறாமல் ஓடக்கூடியதாகும். இதன் வேகமாக ஓடும் தன்மையும் மற்றும் பாலன்ஸ் தவறாமல் இருப்பதற்குக் காரணம் இதன் வால் அமைப்புதான்.
மயில்
இதன் வால் இதன் வண்ணமயமான தோகையேயாகும். தங்கள் இனப்பெருக்கத்திற்காக மற்ற மயிலை இந்த வண்ணமயமான தோகையால் ஈர்க்கிறது.
கங்காரூ
இதற்கு மிக வலுவான அடர்த்தியான வால் இதன் ஐந்தாவது காலமாக கருதப்படுகிறது. குதிக்கும் போதும் எதிரிகளிடம் சண்டையிடும்போதும் வால் சிறந்த உறுதுணையாக இருக்கிறது.
தேள்
இது தன் கொடுக்கு என்று கூறப்படும் வாலால் நன்கு கொட்டுகிறது. இதன் கொடுக்கவே இதற்கு பாதுகாப்பாக உள்ளது.
கடல் குதிரை (seahorse)
கடல் வாழ் உயிரினமான இதன் வால் நல்ல நெகிழ்வுடன் கடல் சூழலுக்கு ஏற்றார்போல் கடல் புல் மற்றும் பவளப்பாறைகளில் சுற்றிக் கொள்ள வசதியான அமைப்புடன் உள்ளது. இதன் வால் இதற்கு சிறந்த பாலன்ஸ் தருகிறது.
ஸ்பைடர் குரங்கு
இது மரத்திற்கு மரம் தாவுவதற்கு ஏதுவாக இதன் நீண்ட வால் அமைந்துள்ளது. வாலினால் மரக்கிளைகளில் தலைகீழாகத் தொங்கும் அளவிற்கு வலுவான வால் படைத்தது.
பல்லி
இது வால் இழந்து போனாலும் மீண்டும் வளரக்கூடிய தன்மை பெற்றது. இது தனக்கு ஆபத்து நேரும்போது வாலை எடுத்துவிடும். இதை ஆட்டோ டாமி என்று கூறுவார்கள்.
த்ரெஷ்ஷர் திமிங்கலம்
இந்த வகை திமிங்கிலத்திற்கு சாட்டை போன்ற நீண்ட வால் உள்ளது. எதிரிகளை இந்த சாட்டை போன்ற வாலாலே வீழ்த்திவிடக்கூடியது. ஆபத்தான இனம்.
ஒட்டகச் சிவிங்கி
இதற்கு நீண்ட முடிகளோடு கூடிய வால் உள்ளது. எப்போதும் வாலை ஆட்டிக்கொண்டிருக்கும். இதற்கு எந்த ஆபத்து நேரவிருந்தாலும் இதன் நீண்ட வால் பாதுகாப்பு தருகிறது.
பங்கோலின்
மிகவும் அழுத்தமான செதில் செதிலான வால் அமைப்பைப் பெற்றது. இதன் வால் இதன எதிரிகளைத் தாக்க மிகவும் உபயோகமாக உள்ளதாக அறியப்படுகிறது.