ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரினம் பற்றி தெரியுமா?

Henneguya salminicola
Henneguya salminicolahttps://www.livescience.com
Published on

க்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினமா? கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா? உண்மையில் அப்படிப்பட்ட உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினத்திற்கு ஆக்ஸிஜனே தேவையில்லையாம். இனி உயிர் வாழ ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை என்ற கூற்று செல்லாது போலும்!

ஆக்சிஜன் இல்லாமல் சுவாசிக்கும் உயிரினம் ஹெனெகுயா சல்மினிகோலா எனப்படும் ஒட்டுண்ணியை இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு உடலில் 10 செல்கள் மட்டுமே இருப்பதாகவும் இதன் மூலம் உயிர் பரிணாம வளர்ச்சி புதிய திசையில் செல்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த ஒட்டுண்ணி காற்றில்லாமல் வாழக்கூடிய உயிரினமாக இருக்கக்கூடும் என்றும், இப்படி காற்று இல்லாமல் வாழக்கூடிய உயிரினம் என்ற புதிய வகையை இந்த ஒட்டுண்ணி உருவாக்கி உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரினத்திற்கு உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் தேவை இல்லையாம். இது எப்படி சாத்தியம் என்று அடுத்தகட்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

ஜெல்லி ஃபிஷ் மீனுடன் தொடர்புடைய இந்த சிறிய ஒட்டுண்ணி ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருகிறது. ஹென்னெகுயா சால்மினிகோலா எனப்படும் இந்த ஒட்டுண்ணி சால்மன் மீன்களுக்குள் காணப்படுகிறது. இவற்றில் ஆக்ஸிஜனை செயலாக்க எந்தத் திறனும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மைட்டோகாண்ட்ரியா எனப்படும் ஒரு உறுப்புதான் உயிரினங்களில் சுவாசம் மற்றும் ஆற்றல் உற்பத்தி உயிர் வேதியியல் செயல்முறைகளை நிகழ்த்தி வரும். ஆனால், இந்த ஒட்டுண்ணிகளில் மைட்டோகாண்ட்ரியாவே இல்லை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கணவன், மனைவி உறவு என்றும் கசக்காமல் இருக்க சில யுக்திகள்!
Henneguya salminicola

ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரினம் இது என்று அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் புரோசிடிங்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இவை ஆற்றலை எவ்வாறு உருவாக்குகிறது என்றும், ஆக்சிஜன் இல்லாமல் வேறுபட்ட சுவாச பழக்கத்தை கொண்டுள்ளதா என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை புதிய பரிணாம வளர்ச்சிப் பாதையை உருவாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com