கணவன், மனைவி உறவு என்றும் கசக்காமல் இருக்க சில யுக்திகள்!

கணவன், மனைவி உறவு கசக்காமல் இருக்க...
கணவன், மனைவி உறவு கசக்காமல் இருக்க...
Updated on

ன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைகளுக்குச் செல்வதால், குடும்பத்தில் இருவரும் சிரித்து பேசி மகிழ வாய்ப்பு குறைவு. கணவன்,-மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில குணம் அல்லது மனம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம்.

இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது அவசியமான ஒன்றாகும். அது, என்னவாகவும் இருக்கலாம்.

ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தனது பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும்.

ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுவதால், வாழ்வில் சுவாரஸ்யம் கூடும்.

நாம் வீட்டில் இருப்பதை விட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் வைத்தல் பாதுகாப்பானதும் கூட.

எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் முன்னிலையில் பேசுவது மனக்கசப்பை ஏற்படுத்தும்.

பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். ‘நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்’ என்பதைப் புரியவைப்பது அவசியம்.

கணவன், மனைவின் குறைகளையும், மனைவி கணவனின் குறைகளையும் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பிரவுன் மற்றும் வெள்ளை நிற அரிசியிலிருக்கும் 6 வகை வைட்டமின் சத்துக்கள்!
கணவன், மனைவி உறவு கசக்காமல் இருக்க...

வீட்டில் புதிதாக ஒரு பொருட்கள் வாங்கப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டால் கணவன், மனைவி இருவரும் ஆலோசனை செய்து அந்தப் பொருளை வாங்க வேண்டும். கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்குத் தெரியாமல் கணவனும் ஒரு பொருளை வாங்கினால் அதுவே கூட ஒரு பிரச்னையாக உருவெடுக்கக் கூடும்.

அதைவிட ரொம்ப முக்கியம் காலையில் எழுந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் குட் மார்னிங் சொல்லிக்கொண்டு அன்றைய நாளைய தொடங்கிப் பாருங்களேன். இருவரின் மனதிலும் புத்துணர்ச்சி கிடைக்கும். பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும் அப்புறம் என்ன? மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.

கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி எந்த ஒரு பிரச்னையையும் மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி இருந்தால் அதை மறைக்கக் கூடாது. அதைப் பற்றி இருவரும் விவாதிக்க வேண்டும். அப்படி விவாதித்து அதற்கு ஒரு முடிவை எட்ட வேண்டும்.

மேற்கண்டவற்றை முயற்சி செய்து பாருங்கள். காலம் முழுவதும் டூயட் பாடலாம், மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குதிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com