வாயில் தந்தங்கள் உள்ள இந்த விலங்கைப் பற்றி தெரியுமா?

musk deer
musk deercredits to pintrest
Published on

தந்தங்கள் என்ற உடனே நம் நினைவுக்கு வருவது யானை மட்டுமே. ஆனால் உண்மையில் தந்தங்கள் கொண்ட மற்றொரு விலங்கு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா, சொல்லுங்கள்? அந்த விலங்கைப் பற்றிய பதிவுதான் இது.

கஸ்தூரி மான் என்று அழைக்கப்படும் விலங்குதான் வாயின் முன் கோரைப் போன்ற தந்தங்களை கொண்டிருக்கும். இந்த விலங்கு மான் என்று அழைக்கப்பட்டாலும், மான் அல்ல. ஏனெனில், உண்மையான மானின் பல உடல் பண்புகளை இந்த விலங்கு பெற்றிருக்கவில்லை.

நீங்கள் இந்த கஸ்தூரிமானை எங்காவது பார்த்திருக்கீர்களா? இந்த கஸ்தூரி மான்கள் கண்ணில் படுவது அரிதான நிகழ்வுதான். கஸ்தூரி மான்கள் சுமார் 3 அடி நீளமும் 2 அடி உயரத்திலும் இருக்கும். இதன் வால்கள் குட்டையாகத்தான் வளரும். எடை என்று பார்த்தால் சராசரியாக, 11 முதல் 18 கிலோ வரை இருக்கும். இந்த கஸ்தூரி மான்கள் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். கஸ்தூரி மான்கள் பொதுவாக ஆசியா, சீனா, ரஷ்யா மற்றும் கொரியாவில் காணப்படுகின்றன. பொதுவாக இந்த கஸ்தூரி மான் இரவில் தான் சுறுசுறுப்பாக இருக்குமாம்.

Musk deer
Musk deercredits to pintrest

நறுமணம் தரும் கஸ்தூரிமான்

கஸ்தூரிமான்களில், ஆண் கஸ்தூரிமான்கள் கஸ்தூரி என்னும் ஒரு மணமுள்ள சுரபியை உற்பத்தி செய்கின்றன. ஆண் கஸ்தூரி மானின் பிறப்புறுப்புக்கு அருகில் இந்த கஸ்தூரி சுரப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கஸ்தூரி என்பது வாசனை திரவியங்களில் பயன்படுத்தப்படும் ஒரு நறுமணப்பொருள். இந்த கஸ்தூரி, கஸ்தூரி மான்களில் இருந்துதான் பெறப்படுகிறது. கஸ்தூரி மான்களில் இருந்து பெறப்படும் இந்த திரவியம் அதிக விலை உயர்ந்த பொருளாகவும் கருதப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
உடலில் சிவப்பு இரத்தம் இல்லாத 11 வகை விலங்கினங்கள் எவை தெரியுமா?
musk deer

மருத்துவ குணங்கள்

கஸ்தூரி அதிக மருத்துவ குணங்களை கொண்டது. மூட்டு வலி, நரம்பு பிரச்சனைகள், வலிப்பு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை நீக்குவதாக நம்பப்படுகிறது. இந்தக் கூற்றுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், இவை, மக்கள் கஸ்தூரி மானை வேட்டையாடுவதற்கு காரணமாக அமைகின்றன.

இந்த கஸ்தூரி மான்கள் தற்போது அழிந்து வரும் விலங்குகளில் ஒன்றாக திகழ்கிறது. நறுமணப் பொருளுக்காக இந்த மான்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டு வருகின்றன என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com