உடலில் சிவப்பு இரத்தம் இல்லாத 11 வகை விலங்கினங்கள் எவை தெரியுமா?

குதிரைவாலி நண்டு
குதிரைவாலி நண்டுhttps://fortune.com
Published on

னித இரத்தம் சிவப்பாக இருக்கும். விலங்குகளுக்கும் சிவப்பு ரத்தம் உண்டு. ஆனால், சில வகையான விலங்குகளின் உடலில் சிவப்பு நிற இரத்தம் இல்லை. அவை எவை என்பது பற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

நம் உடலில் இரத்தம் சிவப்பாக இருப்பதன் காரணம்: நம் உடலில் ஹீமோகுளோபின் என்ற புரதம் இருக்கிறது. ஹீமோகுளோபினில் உள்ள இரும்புடன் ஆக்ஸிஜன் இணையும்போது, அது இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

சிவப்பு நிற இரத்தம் இல்லாத 11 வகை விலங்கினங்கள்:

குதிரைவாலி நண்டு: இதனுடைய இரத்தம் நீல நிறமாக இருக்கும். ஏனென்றால், இதன் உடலில் இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் ஹீமோகுளோபினுக்குப் பதிலாக ஹீமோசயானின் என்ற நிறமி உள்ளது. அதனால் அதன் இரத்தம் நீல நிறத்தில் உள்ளது.

ஆக்டோபஸ்: இதனுடைய இரத்தமும் நீல நிறத்தில் இருக்கும். இது கடலில் வாழும் ஒரு உயிரினம். மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் எப்போதும் வசிக்கிறது. அதனால் ஹீமோகுளோபினுக்குப் பதிலாக ஹீமோசயானின் என்ற நிறமி உள்ளது.

இறால் மற்றும் சிலந்தி: இவையும் நீல நிற இரத்தமே உடலில் கொண்டுள்ளன. இவற்றின் உடலிலும் ஹீமோசயானின் இருக்கிறது. அவையே இவற்றுக்கு ஆக்சிஜனை சுமந்து செல்ல உதவுகிறது. அதனால் இவற்றின் இரத்தமும் நீல நிறத்தில் இருக்கிறது.

லீச் என்ற அட்டைப்பூச்சி தனது உடலில் பச்சை நிற இரத்தத்தைக் கொண்டிருக்கிறது.

வேர்க்கடலைப் புழுவின் உடலிலும் பச்சை நிற இரத்தம் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மண்ணின் சிரிப்பில் அடங்கியுள்ளது மனித குலத்தின் எதிர்காலம்!
குதிரைவாலி நண்டு

இதேபோல், கரப்பான் பூச்சி, பூரான், ரயில் பூச்சி எனப்படும் மரவட்டை போன்றவற்றிற்கும் சிவப்பு நிற இரத்தம் இல்லை. அதற்கு பதிலாக நிறமற்ற அல்லது வெள்ளை நிற இரத்தத்தை கொண்டுள்ளன.

கடல் வெள்ளரி எனப்படும் கடல் விலங்குக்கு மஞ்சள் நிற இரத்தம் இருக்கும். இதன் உடலில் வனபின் என்கிற நிறமி இருக்கும். அது அதனுடைய இரத்தத்தை மஞ்சள் நிறத்தில் வைத்திருக்கிறது.

ஐஸ் ஃபிஷ் எனப்படும் விலங்குக்கு தெளிவான இரத்தம் இல்லை. ஏனென்றால், இதன் உடலில் முற்றிலும் இரத்த அணுக்களே இல்லை.

உடலில் இரத்தம் சிவப்பாக இருப்பதற்கு ஹீமோகுளோபின் தேவை. இந்த விலங்குகளுக்கு இரும்புக்கு பதிலாக தாமிரம் அல்லது வெனடியம் போன்ற உலோக அயனிகளின் இருப்பு அவற்றின் இரத்த நிறத்தை மாற்றுகிறது. ஐஸ் ஃபிஷ், இறால், கடல் வெள்ளரி போன்றவை மிகவும் குளிர்ந்த நீர் சூழ்நிலையில் இருப்பதால் இவற்றின் இரத்தம் சிவப்பாக இல்லை. அதுமட்டுமின்றி, இந்த விலங்கினங்களின் உடலில் மெட்டபாலிசம் வேறுபடுகிறது. மேலும், ஆக்சிஜன் அளவு கம்மியாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும், இரும்புக்குப் பதில் தாமிரம், வெனடியம் இருந்தாலும் உடலில் உள்ள இரத்தத்தின் நிறம் மாறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com