ஆந்தைகள் இரவில் பார்ப்பது எப்படித் தெரியுமா?

owl
owl
Published on

ந்தைகள் இரவில் சஞ்சரிப்பவை. அவற்றை இரை வேட்டையாடும் ராஜாளிக் கழுகுகளின் இனத்தைச் சேர்ந்ததாகப் பிரித்த இருக்கின்றனர். தென் துருவம், சில தீவுகள் தவிர உலகெங்கிலும் ஆந்தைகள் இருக்கின்றன. ஆந்தைகளில் மிகச் சிறியது 18 செ.மீ. நீளமும், மிகப் பெரியவை 60 செ.மீ. நீளமும் உள்ளன. ஆந்தையின் உருவ அமைப்பு தெளிவாகவும், திட்டவட்டமாகவும் உள்ளது. பெரிய தலை, வட்ட முகம், முன்னோக்கி நீட்டிக் கொண்டிருக்கும் பெரிய கண்கள். சிறிய வளைந்த மூக்கு. சில ஆந்தைகளுக்கு தலை மீது இரு கொம்புகள் உள்ளது, அவை இறகுகளால் ஆனது.

இந்த உலகில் மொத்தம் 200க்கும் அதிகமான ஆந்தை இனங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 33 வகையும், குறிப்பாக தமிழகத்தில் 15 வகையான ஆந்தை இனங்கள் இருக்கின்றன. ஆந்தைகளின் வாழ்க்கைமுறை குறித்து பல தவறான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முக்கியமான கருத்து ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியாது என்பது. ஆந்தையின் கண் பகுதி அதன் தலையில் சுமார் 25 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் துல்லியமாக அதனால் பார்க்க முடியும்.

ஆந்தைகளுக்குப் பகலை விட இரவில் கண் மிக நன்றாக தெரியும். மனிதனின் கண்களை விட ஆந்தையின் கண்களுக்கு சில சிறப்பான அம்சங்கள் உண்டு. நாம் எப்படி பார்க்கிறோம்? பார்க்கப்படும் பொருள் கண்ணின் ‘லென்ஸ்’ மூலம் மையப்படுத்தப்பட்டு ரெட்டினா (கண் திரை) மீது தலை கீழாக விழும். ரெட்டினா வில் தலை கீழாக விழும். உருவம் நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவை மீண்டும் நேர் உருவம் பெறுகின்றன.

ஆந்தையின் கண்களில் உள்ள லென்சுக்கும், ரெட்டினாவுக்கும் இடையில் உள்ள தூரம் நம்முடையதை விட அதிகம். இதனால் ரெட்டினாவில் விழும் உருவம் பெரிதாக இருக்கும். ஆந்தையின் கண்ணில் ‘பெக்டைன்’ என்று ஒரு ஸ்பெஷல் உறுப்பு இருக்கிறது. அது வெவ்வேறு தூரங்களுக்குத் தகுந்தவாறு ஃபோகஸ் செய்யும் திறமை உடையது. மேலும் ரெட்டினாவில் மெல்லிய கம்பி போல, கோணங்கள் போல நுண் பகுதிகள் இருக்கும். இது ஆந்தையின் கண்ணில் நமக்கு இருப்பதைவிட 5 மடங்கு அதிகம். நம் கண்ணில் ஒரு சதுர மீட்டருக்கு 2000 என்றால் ஆந்தையின் கண்ணில் 10,000 இருக்கும். அதனால் நம்மை விட ஆந்தைக்கு 5 மடங்கு அதிகம் பார்வை திறன் உண்டு.

இதையும் படியுங்கள்:
வளர்சிறார்கள் வளர்சிதை மாற்றம் சிறப்புடன் நடைபெற உட்கொள்ள வேண்டிய உணவுகள்!
owl

இது தவிர ஆந்தையின் கண்ணில் இருக்கும் சிவப்பான பொருள் ஒன்றால் அதன் ஒளிக் கூர்யுணர்வு அதிகப்படுத்தப்படுகிறது. ஆந்தையின் கண்ணின் மணி மிக அதிகமாக விரிவடையும் தன்மை கொண்டது. இதனால் மிக லேசான ஒளிக்கதிர் கூட இதன் கண்ணில் நுழைய முடியும். இப்போது புரிகிறதா ஏன் ஆந்தைகளால் இரவில் நன்றாக பார்க்க முடிகிறது என்று!

ஆந்தைகளால் தன்னுடைய கழுத்தை 270 டிகிரி கோணத்தில் சுழற்ற முடியும். இது தவிர, அதன் செவிப்புலனும் மிகத் துல்லியமாக இருக்கும். மேலும், எவ்வித ஓசையும் இல்லாமல் அவற்றால் பறக்க முடியும். இத்தகைய சிறப்புகளால் உணவுச் சங்கிலியில் அவை முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை கொன்றுண்ணிகளாக இருக்கின்றன. ஆந்தைகளின் விருப்ப உணவாக எலிகள் இருப்பதால், விவசாயத்தை அழிக்கும் எலிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

சில ஆய்வுகளின் மூலம் ஆந்தைகள் ஒரு நாளில் 4 முதல் 6 எலிகள் வரை வேட்டையாடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி விவசாயத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் எலிகளை அதிகப்படியாக ஆந்தைகள் அழிப்பதால், ‘ஆந்தைகளை விவசாயிகளின் நண்பன்’ என்று சொல்கிறார்கள். ஆந்தைகள் மனிதனுக்கு நோய்களை உருவாக்கும் கிருமிகளையும், உயிரிகளையும் . பெருக விடாமல் உணவாகக் கொள்கின்றன. இதனாலும் ஆந்தைகளை மனிதனின் நண்பன் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com