புதினா செடியை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா?

Mint
Mint
Published on

‘புதினாவின் மணம் ஊரைத் தூக்கும்’ என்பார்கள். நல்ல மணம் மட்டுமன்றி, மருத்துவக் குணங்களும் பல கொண்ட, ‘புதினா’ எனும்  தாவரத்தை வீட்டில் எப்படி வளர்ப்பது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாக, புதினாவை வாங்கிக்கொண்டு வந்தவுடன் அந்த இலைகளை பறித்து விட்டு, காம்புகளை அப்படியே கிடைத்த இடத்தில் நட்டு வைப்போம். அதுவும் வளரும். ஆனால், நல்ல ஊக்கமாக வளராது. கொடி போல படர்ந்து இலைகள் குட்டை குட்டையாக இருக்கும். அதைப் பறிப்பதும் கடினமாக இருக்கும். சில சமயங்களில் இந்தக் காரணங்களினால் அதைப் பறிக்காமல் விட்டு விடுவோம். அதனால் அது நாளடைவில் கருகியும் போய்விடும். இதைத் தவிர்த்து புதினா செடி நல்ல ஊக்கமாக வளர சில யோசனையைப் பின்பற்றினால் நல்ல வாசமுள்ள புதினாவைப் பெறலாம்.

புதினாவின் இலைகளைப் பறித்துவிட்டு நல்ல செழிப்பாக இருக்கும் தண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். வாயகன்ற ஒரு சீசாவில் சுத்தமான தண்ணீர் ஊற்றி தண்டுகளை அதில் கால் பாகம் படுமாறு போட்டு வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முருங்கை மரத்தில் கம்பளி பூச்சியா? என்ன செய்யலாம்?
Mint

ஒரு வாரம் கழித்து அது நீரில் வேர்விடும். சின்னச் சின்ன இலைகளும் வரும். அப்பொழுது தனியாக ஒரு தொட்டியிலோ அல்லது நிறைய செடி, கொடிகள் இல்லாத ஒரு இடத்தில் மண், எரு நிரப்பி, தண்ணீர் விட்டு நன்கு பதமான பிறகு இந்தச் செடிகளை நட்டு வைத்தால் நன்றாக வளரும். இலைகளும் நல்ல பெரியதாகக் கிடைக்கும். பறிப்பதும் எளிது. அவ்வப்போது பராமரிப்பதும் எளிது. அது நன்றாக பச்சையாக இருக்கும்பொழுது இலைகளைப் பறித்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பழுப்பில்லாமல் இலைகள் பச்சையாகக் கிடைக்கும்.

கொஞ்சம் பராமரிக்காமல் பழுப்பு தட்ட விட்டுவிட்டால் பிறகு கருகிப் போய்விடும். மேலும், இதனை மற்ற செடிகளோடு வளர்த்தால் இதன் வளர்ச்சி பாதிக்கும். ஆதலால் இதனை மற்ற செடிகளோடு வளர்க்காமல், தனியாக வளர்த்து பயன் பெற வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com