உலக அளவில் பிரபலமான 10 கோழி இனங்கள் தெரியுமா?

10 Popular Chicken Breeds
10 Popular Chicken Breeds
Published on

1. ஆஸ்ட்ராலார்ப்ஸ் கோழி: மென்மையான குணமுடைய சாந்தமான கோழி இனம் இது. இந்த வகை கோழி அவற்றின் உரிமையாளர்களுடன் இணைந்து பழகும் வகையில் அமைதியானது. ஆகவே, குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களுக்கு சிறந்தவை. மற்றும் எந்த நகர்ப்புற அல்லது ஏக்கர் கொல்லைப் புறத்திலும் இருப்பது அதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவை ஆண்டுக்கு 250 வெளிர் பழுப்பு நிற முட்டைகளை இடும். சில கோழிகள் 364 முட்டைகள் இட்டும் சாதனைப் படைத்துள்ளது.

2. பிராய்லர் கோழி: வீடுகள் மற்றும் பெரிய கட்டமைப்புகளில் வளர்க்கப்படுகின்றன. அவை அங்கு சுற்றித் திரிந்து பிற கோழிகளுடன் தொடர்பு கொள்கின்றன. மேலும், விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு பண்ணைகளிலும் 25000 கோழிகள் வரை ஒன்றாக வாழ்கின்றன. ஒரு பிராய்லர் கோழி செழித்து வளர சுமார் ஏழு வாரங்கள் ஆகும். பின்னர் சந்தைபடுத்தப்படுகின்றன.

3. அயம் செமானி கோழி: இது இந்தோனேசியாவை சேர்ந்த மிகவும் தனித்துவமான மற்றும் அரிதான கருப்பு கோழி. இறைச்சிக்காக ஒன்றை எடுத்துக் கொள்ளும்போது இந்த கோழியில் கருப்பு இதயம் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம். இவை ஒரு வருடத்திற்கு 80 முட்டைகளை இடும்.

4. வெள்ளை லெகோர்ன் கோழி: இந்த கோழிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான வெள்ளை கோழி இனமாகும். இந்த இனம் லூனி ட்யூன்ஸ் நிகழ்ச்சியில் ஒரு பாத்திரத்தை கொண்டுள்ளது. வெள்ளை இறகுகள், வெள்ளை காது மடல்களை கொண்டுள்ளது. இந்த கோழிகள் நாம் விரும்பும் வண்ணமே வருடத்திற்கு 320 முட்டைகள் வரை இடும்.

5. ரோட் தீவு சிவப்பு கோழி: ரோட் தீவு சிவப்பு கோழி, ரோட் ஐலண்ட் ரெட்ஸ் மிகவும் பொதுவான சிவப்பு கோழி இனங்கள். இவை இறைச்சி, முட்டை இடுதல் மற்றும் கவர்ச்சிகரமான பண்புகளுக்கு பெயர் பெற்றவை. பொதுவாக, வாரத்திற்கு 5 முதல் 6 முட்டைகள் வரை இடும். முட்டைகள் வெளிர் பழுப்பு நிறத்தில் நடுத்தரம் முதல் பெரிதாக இருக்கும்.

6. ஓர்பிங்டன் கோழி: ஓர்பிங்டன் ஒரு பிரிட்டிஷ் இனமான கோழி. முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப் படும். ஒவ்வொரு வாரமும் சராசரியாக 3 முதல் 5 முட்டைகள் வரை இடும்.

7. போலீஷ் கோழி: போலீஷ் க்ரெஸ்டட் என்பது ஒரு ஐரோப்பிய இனமான கோழிகள். இவை இறகுகளால் பெயர் பெற்றது. இருப்பினும் இந்த பறவைகள் நெதர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் இருந்து வருகின்றன. ஆண்டுக்கு சராசரி 150 பெரிய வெள்ளை நிற முட்டைகளை இடும்.

இதையும் படியுங்கள்:
தூத்துக்குடி மக்ரூன் தோன்றிய வரலாறு அறிவோம்!
10 Popular Chicken Breeds

8. மாறன் கோழி: மாரன், பிரெஞ்சு, தென்மேற்கு பிரான்சின் Nouvelle Aquitaine பகுதிகளில் உள்ள Charente Maritime துறையின் கோழி இனமாகும். ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 முட்டைகள் இடும் என்று எதிர்பார்க்கலாம்.

9. கடக்நாத் கோழி: காளி மாசி என்றும் அழைக்கப்படும் கடக்நாத் கோழி ஒரு இந்திய இனமாகும். இவை மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தவை ஆண்டுக்கு 120 முதல் 140 முட்டைகள் வரை கிடைக்கும். இதில் கோல்டன், ஜெட் பிளாக் மற்றும் பென்சில் என மூன்று வகைகள் உள்ளன.

10. பீல்ஃபெட்டா கோழி: இவை ஜெர்மனியில் இருந்து வந்தவை. மென்மையான கோழிகள். இரட்டை நோக்கம் கொண்ட இனத்திற்காக வளர்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் சுமார் 200 பெரிய அடர் பழுப்பு முட்டைகளை இடுகின்றன. மேலும், அவை நல்ல குளிர்கால கோழிகளாகும். இவை மிகவும் பெரிய நேர்த்தியான பழுப்பு நிற முட்டைகளை இடுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com