சோலார் எனர்ஜியால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

solar Energy
solar Energyhttps://energy.mit.edu
Published on

னித இனத்தால் வெகு காலங்களுக்கு முன்பிருந்தே தொன்று தொட்டு வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆற்றல்கள் மரபுசார் ஆற்றல்கள் எனப்படும். அனைத்து ஆற்றல்களிலும் சூரிய ஆற்றல்தான் மனிதன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்தி வரும் ஆற்றல் வளமாகும். மரபுசார் ஆற்றல் வளம், மரபுசாரா ஆற்றல் வளம் என்று ஆற்றல் இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சூரிய மின்சாரம் எனப்படும் சோலார் எனர்ஜியால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

சோலார் எனர்ஜி எனப்படும் சூரிய ஆற்றலே நிலையான ஆற்றல் மூலம் என்று கூறலாம். ஆதி மனிதன் முதலில் கண்டுபிடித்த ஆற்றல் தீயே. அதன் பின்னர்தான் விறகு, விவசாயக் கழிவுகள், சாணம், சாண எரிவாயு, மண்ணெண்ணெய், நிலக்கரி, திரவ பெட்ரோலிய வாயு, மின்சாரம் போன்றவை மனித இனத்தால் பயன்படுத்தப்படும் ஆற்றல் வளங்கள் ஆயின.

சூரிய ஒளியால் மின்சாரம் உற்பத்தி செய்தல் என்பது இன்று உலகின் பல பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கிறது. குறிப்பாக வெப்ப மண்டல பிரதேசங்களில் சூரிய கதிர்வீச்சு அதிகமாகவே உள்ளது. அத்தகைய பகுதிகளில் சூரிய ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கின்றது. நமது நாட்டில் சூரிய ஆற்றல் அதன் ஒளி வடிவில் ஏராளமாக கிடைக்கின்றது. இது ஒளியையும் வெப்பத்தையும் கொடுப்பதால் மின்சார உற்பத்திக்கு ஏதுவாகிறது.

சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவது போட்டோவோல்டிக் செல்கள். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூரிய தகடுகளை, இந்த ஆற்றலைப் பயன்படுத்தும் கருவியுடன் நேரடியாக மின்கலங்களுடன் இணைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். அப்படி உற்பத்தி செய்த மின்சாரத்தை சேமித்து சூரிய ஒளிக்கதிர்கள் இல்லாத நேரங்களிலும் பயன்படுத்தும் முறையைக் கொண்டு வந்துள்ளனர். வேறு வகையில் மின் வசதியை கொடுக்க முடியாத தொலைதூரப் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தெருக்களிலும் மின் விளக்குகள் எரியவும், தொலைக்காட்சி மற்றும் வானொலி பெட்டிகளை இயக்கவும், நீர் இறைக்கும் இதர மின் சாதனங்களை பயன்படுத்தவும் சூரிய ஒளி கதிர்களால் உருவாக்கப்பட்டு சேமிக்கப்பட்ட இந்த மின்சாரத்தால் செய்ய முடிகிறது. இதனை இந்தியாவில் மரபுசாரா எரிசக்தி வளங்கள் துறை செய்து வருகிறது.

தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறைகளும் ரயில்வே போன்ற அமைப்புகளும் தங்களுக்கு தேவையான மின் சக்தியை சூரிய ஒளி கதிர்கள் மூலம் இவ்வாறு தயாரிக்கப்பட்ட மின்சாரத்திலிருந்து பெறுகின்றன. கலங்கரை விளக்குகளுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் மின் சக்தி அளிப்பதற்கு இவை பெரிதும் பயன்படுவதாகக் கூறுகின்றனர்.

பேருந்து டெப்போக்கள், பேருந்து நிறுத்தும் இடங்கள், வீடுகள் மற்றும் தெருகளுக்கு விளக்குகள் எரிய வைத்தல், சில இயந்திரங்களை இயக்குதல், உப்பு நீரை நன்னீர் ஆக்குதல் ,வெந்நீர் தயாரித்தல், சமையல் செய்ய அடுப்பு பற்ற வைத்தல், குளிர் பதனப்படுத்துதல், நுண்ணுயிர் கிருமிகளை நீக்குதல், சூடானவற்றை உலர்த்துதல் போன்றவற்றிற்கும்  இந்த ஏரி சக்தி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பெரும் அளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவது தடுக்கப்படுகிறது என்கிறது சுற்றுச்சூழல் அமைப்பு.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய வாழ்வுக்கு ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்!
solar Energy

இதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்த்தால் சூரிய ஒளி தாராளமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கக்கூடியது. சூரிய தகடுகளை ஒரு தடவை நிறுவி விட்டால் அவை ஆண்டு கணக்காக ஆற்றலை தந்து கொண்டிருக்கும். இவை மற்ற மரபுசார் எரிபொருட்களை காட்டிலும் மலிவானது.

மற்ற எரிபொருட்களை போன்று இது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. உலகெங்கும் நல்ல தொழில்நுட்ப வளர்ச்சி பெற்று உள்ளது இந்த முறை. இந்தியாவில் நுகர்வோர்களுக்கு நிறைய மானியம் கிடைக்கிறது.

சிலிக்கான் மாடல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் தட்டுப்பாடு இன்றியும், அரசு மானியம் வழங்குவதால் விலை மலிவாகவும் கிடைக்கிறது. சூரிய ஒளி கிடைக்காத காலங்களிலும் மின்கலங்களில் சேமித்த மின்சாரத்தை பயன்படுத்தி நன்மை அடைய முடியும்.

ஆற்றலை சேகரிக்கும் மின் கலங்கள், விளக்குகள், மோட்டார் பம்புகள் ஆகியவை சந்தையில் கிடைப்பதில் சிரமம் இருந்தது. தற்பொழுது அவற்றை தயாரிப்பதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதலால் பெரிய வீடுகளை வைத்திருப்போர் சூரிய மின்சாரம், சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் பெறுவதற்கு முயல வேண்டியது மிக மிக அவசியம். சுற்றுச்சூழலை காப்பதற்கும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com