ஆரோக்கிய வாழ்வுக்கு ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்!

ஆரோக்கியமான ஆண்
ஆரோக்கியமான ஆண்
Published on

பொதுவாகவே, ஆண்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்களாக இருந்தாலும் தங்களது உடல் நலனில் அதிக அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். குடும்பத் தேவைக்காக இரவும் பகலும் உழைப்பை மட்டுமே பிரதானமாக நினைப்பதால் விரைவில் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வீட்டில் உள்ள ஆணின் உடல்நலம் குன்றி  விட்டால் மொத்த குடும்பமே அல்லல்படுகிறது.

சில ஆண்கள் உடற்பயிற்சி செய்யாமல், மது அருந்துதல், புகைப்பிடித்தல், நொறுக்கித் தீனி போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சில ஆண்களோ காலை உணவை தவிர்க்கிறார்கள். ஆண்களிடம் காணப்படும் இந்த மோசமான பழக்கங்களால் இதய நோய், புற்றுநோய், காசநோய், உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற அபாயங்கள் அதிகரிக்கின்றன. அந்த வகையில், ஆண்கள் நீண்ட ஆயுளோடு வாழ விரும்பினால் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம். ஆண்கள் ஆரோக்கியமாக வாழ பின்பற்ற வேண்டிய 5 பழக்கங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1. ஆண்கள்  நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காருவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்களுக்கு அமிலத்தன்மை, உடல் பருமன், மூட்டுகள் மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். அதுமட்டுமின்றி, இரத்த ஓட்டமும் சரியாக நடக்காது. எனவே, அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நின்று கொண்டு வேலை செய்யுங்கள் அல்லது ஐந்து நிமிடம் நடக்கவும். மேலும், நீங்கள் லிப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்.

2. ஆண்களுக்கு அலுவலகம், வீடு, குடும்பம், குழந்தைகளின் கல்வி, நிதி நிலைமை போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள்தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தால் உடலில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், எடை அதிகரிப்பு, நினைவாற்றல், ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவையாகும். எனவே, இந்த பிரச்னைகள் வராமல் இருக்க உங்களுக்காக சற்று நேரத்தை நீங்கள் ஒதுக்குங்கள். எப்போதும் எது குறித்தும் கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியாகவே இருக்க முயற்சி செய்யுங்கள். மன அழுத்தத்தை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், இசை கேளுங்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடுங்கள்.

3. பெரும்பாலான ஆண்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது, போதை பொருள் எடுத்துக்கொள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இதனால் நுரையீரல் புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படும். எனவே, இவற்றிலிருந்து விலகி இருங்கள். அப்போதுதான் நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இதையும் படியுங்கள்:
லெமன் உபயோகித்து சுத்தம் செய்யக்கூடாத 5 பொருட்கள் எவை தெரியுமா?
ஆரோக்கியமான ஆண்

4. நீங்கள் உடல் எடையை குறைக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும் விரும்பினால், தண்ணீர் அதிகமாக குடியுங்கள். இது நல்ல மனநிலை மற்றும் உடலில் வெப்பநிலையை பராமரிக்கும். எனவே, நீங்கள் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

5. சில ஆண்கள் வெளியில் பார்ப்பதற்கு ஃபிட்டாக இருந்தாலும் அவர்கள் உள் உடல் உறுப்புகள் அந்த அளவிற்கு நன்றாக வேலை செய்யாது. ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதய பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முழு உடல் பரிசோதனையும் செய்து கொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேற்கூறியவற்றைக் கடைபிடிக்கும் ஆண்கள் தங்களது உடல் நலத்தை பாதுகாப்பதோடு ,குடும்பத்தையும் நன்றாகக் கட்டிக் காக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com