ஆழிப்பேரலை சுனாமியின் வரலாறு தெரியுமா?

Tsunami
Tsunami
Published on

யற்கைக்கு இணையாக செயற்கை ஈடுகட்டி நிற்கிறது என்றாலும், சில நேரங்களில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாததை நாம் காண நேரிடுகிறது. அதுபோல்தான் ஆழிப்பேரலை என்று அழைக்கப்படும் சுனாமியும். அதனைப் பற்றிய சில தகவல்களை இந்தப் பகுதியில் காண்போம்.

ஆழிப்பேரலை என்பது சுனாமி. சுனாமி என்பது ஜப்பானிய மொழிச் சொல். 'சு' என்றால் துறைமுகம் என்றும், 'னாமி' என்றால் அலை என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே, சுனாமி என்ற சொல்லுக்கு 'துறைமுக அலை' என்று பொருள்.

நாம் வாழுகின்ற பூமியில் 70 சதவீத நிலப்பரப்பு கடலுக்கு அடியில் உள்ளது. பூமி முழுவதையும் நிலம் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள 12 பாறைத் தட்டுகள் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளன. இந்தத் தட்டுகள் ஒன்றையொன்று மோதிக் கொண்டாலோ அல்லது இருக்கின்ற இடத்திலிருந்து நகர்ந்தாலோ பூகம்பங்கள் உருவாகின்றன. தட்டுகள் நேருக்கு நேர் ஒன்றையோன்று மோதிக்கொள்ளும் பொழுது ஒன்று கீழேயும் மற்றொன்று மேலேயுமாக தள்ளப்படுகிறது. இரண்டுமே மோதிக்கொள்ளும் வேகத்தைப் பொறுத்து ஏற்படும் இடைவெளியில் இருந்து கிளம்பும் அழுத்தமும், வெப்பமும் மேல் நோக்கி ஆவேசமாக வெளி வருகிறது. இதன் வேகத்தின் அளவைப் பொறுத்தே கடல் மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றில் நடுக்கம் ஏற்படுகிறது. கடலுக்கு அடியில் ஏற்படும் இந்த பூகம்பம் கடலின் மேற்பரப்பிற்கு வரும் பொழுது ராட்சச அலைகளை உண்டாக்குகிறது.

நில அதிர்வுக்கு தக்கவாறு கடல் அலைகளின் வீரியம் இருக்கும். ரிக்டர் அளவுகோளில் ஐந்துக்கு குறைவாக இருந்தால் எந்த பாதிப்பும் தெரியாது. ஐந்து முதல் ஏழு வரை ஓரளவுக்கு பாதிப்புகள் இருக்கும். 7.5க்கு மேல் இருக்கும்பொழுதுதான் சுனாமி அலைகள் தோன்றும். ஆழிப்பேரலை சாதாரண நேரங்களில் எழும்பும் அலைகளைப் போல் அல்லாமல் மிக அதிக உயரமாகவும் மணிக்கு 800 முதல் 1000 கிலோ மீட்டர் வேகத்திலும் இவ்வலைகள் நிலப்பகுதிக்குள் நுழையும்பொழுது நிலநடுக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் காட்டிலும் மிக மிக அதிகமான அளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

கி.மு. 326ல் சிந்து சமவெளி கட்ச் வளைக்குடா பகுதி போன்றவற்றில் சுனாமி ஏற்பட்டிருக்கிறது .1650ல் கிரேக்கத்தில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு 1775, 1883, 1893, 1896 என்று இடைவெளி குறைந்து ஏற்பட்டு  இருந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் ஸ்பெயின், போர்ச்சுக்கல், வட ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, ஜாவா, ஜப்பான், போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள ஹவாய் இதில் கி.பி 1946ல் ஏற்பட்டுள்ளது. இந்த சுனாமிதான் பேரழிவைக் கொடுத்திருக்கிறது. ரஷ்யாவிலும் சுனாமி தாக்கியிருக்கிறது. கி.பி. 1883ல் இந்தோனேசியாவில் உருவாகி சென்னையைத் தாக்கி இருக்கிறது. 1945ல் பாகிஸ்தானின் கராச்சி பகுதிகளில் உருவாகி இந்தியாவின் கட்ச் பகுதியை தாக்கி இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பெருமாளின் திவ்ய திருநாமங்கள் மூன்றும் அவற்றின் பொருளும்!
Tsunami

அதன் பிறகு 2004 டிசம்பர் 26 அன்று உண்டான சுனாமியால் சுமத்திரா தீவு (இந்தியத் தட்டும் மியான்மர் தட்டும் கடலுக்கு அடியில் மோதிக்கொண்டதால் ஏற்பட்டது) இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை, சோமாலியா, மலேசியா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டன.

இந்தியாவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்கரைப் பகுதிகள் முழுவதுமாகவும் ஆந்திராவின் தெற்கு பகுதியையும் கேரளா, கர்நாடகா மாநிலங்களின் சில பகுதிகளையும் சுனாமி கடுமையாகத் தாக்கியது. இதுதான் பெருமளவில் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தியது. இது சமீபத்தியதாகவும் அதிக மக்களை பலி கொண்டதாகவும் இருப்பதால் எல்லோருடைய மனதிலும் பதிந்த சோக சுவடுகள் இன்றும் மறையாமலேயே இருக்கின்றன.

ஆக, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்கு பார்த்தால் சுனாமி என்பது பூமிக்கு புதியவை அல்ல எனத் தெரிய வருகிறது. விலங்குகள், பறவை இனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் செயல்கள் வித்தியாசமாகத் தென்பட்டால் இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com