சால் மரங்கள் இமயமலை, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அசாம் மற்றும் மத்திய பிரதேசத்தில் மட்டுமே உள்ளன. சால் சத்தீஸ்கரின் மாநில மரம் ஆகும். இதன் தாவரவியல் பெயர் ஷோரியா ரோபஸ்டா.
சால் மரத்தின் முக்கியத்துவம்: இந்து, புத்தா, ஜெயின் புராணங்களில் அடிக்கடி இம்மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணு பகவான் தனது வாமன அவதாரத்தில் சால் மரத்தின் கீழ் வசித்ததாக நம்பப்படுகிறது. அதேவேளையில் புத்தர் சால் மரத்தின் கீழ் பிறந்தார் என்பதாகவும் கூறப்படுகிறது. நீண்ட ஆயுள், வளர்ச்சி மற்றும் வலிமை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட மரம். பெரும்பாலும் மூன்று மதங்களிலும் புனித சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. சால் மரம் பழங்குடி தெய்வத்தின் வீடு மற்றும் புனித மரமாகக் கருதப்படுகிறது.
பழங்குடியினரின் திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் சால் மரத்தால் ஆழமாக வேரூன்றி உள்ளன. பழங்குடியினரின் நம்பிக்கையின்படி மணமகன் சால் மர பலி பீடத்தின் மேல் அமராமல் திருமணம் முழுமையடையாது மற்றும் அர்த்தமற்றதாகி விடும்.
சால் மரத்தின் பயன்கள்:
1. சால் மரத்தின் மர மதிப்பு அதிகம். தோல் பதனிடுவதற்கு இதன் பட்டை பயன்படுத்தப்படுகிறது.
2. சால் மரத்தில் இருந்து ‘சால் டம்மர்’ எனப்படும் நல்லெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது படகுகளை அமைப்பதற்கும், தூபம் மற்றும் வண்ண பூச்சு செய்வதற்கும் பயன்படுகிறது.
3, கார்பன் காகிதங்கள் மற்றும் ரிப்பன்கள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மேலும், இது மென்மையான மெழுகுகளை கடினப்படுத்துவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
4, எப்போதாவது பழங்குடியினர் அதன் இலைகளை புகையிலை மூடுவதற்கு பயன்படுத்துகின்றனர்.
5, இது கட்டுமானத்திற்கு மிகவும் பொருத்தமான மரமாகும். பாலம், பீம்கள், காப்பு உறைகள் (காப்பிங்ஸ்), ரயில்கள், கதவுகள், ஜன்னல் கம்பங்கள், வண்டி உடல்கள் மற்றும் குறிப்பாக ரெயில்வே ஸ்லீப்பர்கள் இதிலிருந்து செய்யப்படுகின்றன.
6. விவசாயக் கருவிகள், கூடார ஆப்புகள், திரவ சேமிப்பு தொட்டிகள், கம்பங்கள், ராஃப்டர்கள், வண்டிகள் மற்றும் வேகன்கள், சக்கரங்கள் மற்றும் எரிபொருள் அனைத்திற்கும் அதிகமாகத் தேவைப்படுகிறது.
மரப்பட்டையின் மருத்துவ குணங்கள்: சால் மரத்தின் பட்டை பாரம்பரிய மருத்துவத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இது பின்வரும் பண்புகளை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, காயம் குணப்படுத்தும் பண்புகள், வலி நிவாரணி, வயிற்றுப்போக்கு எதிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
சால் மரங்களில் காணப்படும் ‘கர்ண ரோகஹாரா‘ காது நோய் தொற்றை குணப்படுத்துகிறது. மற்றும் அவற்றால் ஏற்படும் வலியை போக்குகிறது. இது ஆயுர்வேத காலத்தில் இருந்தே காது நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
‘ஸ்வேதஹாரா’ என்பது சால் மரத்தில் காணப்படும் மிகவும் வலுவான உறுப்பு. இது உடலின் அதிகப்படியான வியர்வைக்கு எதிராகப் போராடுகிறது. இதனால் ஒருவர் மோசமான உடல் துர்நாற்றத்தை திறம்பட சமாளிக்க உதவும். மேலும், தொழுநோய், காயங்கள், புண்கள், இருமல், கொனோரியா, தலைவலி போன்றவற்றையும் குணப்படுத்த மருந்து தயாரிக்கப்படுகிறது. தாவரத்தின் பட்டை மற்றும் இலைகளில் இருந்து எடுக்கப்படும் மருந்துகள் பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சால் மரத்தின் கூழில், சர்க்கரை, கம், மாலிக், சிட்ரிக் மற்றும் டார்டாரிக் அமிலங்கள் உட்பட பல அமிலங்கள் உள்ளன. சால் பழத்தில் தோராயமாக 66 சதவிகிதம் கர்னல் மற்றும் காய் ஆகும். அதேசமயம் 33 சதவிகிதம் ஷெல் மற்றும் கேலிக்ஸ் ஆகும். சால் பழம் துவர்ப்பு மற்றும் கசப்பான சுவையில் இருக்கும்.
சால் மரம் வன விலங்குகளுக்கு வாழ்விடத்தை வழங்குவதன் மூலமும் மண்ணை பாதுகாப்பதன் மூலமும், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதன் மூலமும், மருத்துவ குணங்களை வழங்குவதிலும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துகிறது.