எந்த இலையில் உணவருந்த என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

தாமரை இலை உணவு
தாமரை இலை உணவுhttps://pulses.asia
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

ணவு வகைகளைப் பரிமாறி சாப்பிட தற்காலத்தில் தட்டு, கிண்ணம் போன்ற பல வகையான உபகரணங்களைப் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற உலோகப் பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மக்கள் இலைகளை மட்டுமே உணவுகளை வைத்து சாப்பிட பயன்படுத்தினார்கள். இவற்றில் பெரும்பாலும் மக்கள் வாழை இலைகளையே அதிகம் பயன்படுத்தினர். இது தவிர்த்து, உணவுகளை வைத்து சாப்பிட மேலும் பல இலைகள் உள்ளன. அவை உணவு பரிமாறுவதற்கு மங்கலகரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகின்றன. உணவு பரிமாறி சாப்பிட எந்தெந்த இலைகளைப் பயன்படுத்தலாம், அதன் சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

வாழை இலை: வாழையடி வாழையாகவே இன்றும் தென்னிந்தியாவில் பல பகுதிகளிலும் வாழை இலையில் உணவு உண்ண வேண்டும் என்ற விதி உள்ளது. வீட்டில் உறவினர்களுக்கு விருந்து அளிப்பது என்றால் அங்கு கட்டாயம் வாழை இலை இருக்கும். பசுமையான வாழை இலையில் சூடான உணவை பரிமாறி சாப்பிடும்போது அதில் உள்ள பச்சையமும், சத்துக்களும் போனஸாக நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலை ஒரு சுற்றுச்சூழல் நட்பு விருப்பம் ஆகும். ஏனெனில், இது ஒரு மக்கும் தன்மை கொண்டது மற்றும் தட்டுக்களின் பயன்பாடு குறைகிறது. மேலும், இலையின் இயற்கையான மெழுகு பூச்சு உணவுக்கு ஒரு நுட்பமான சுவையை அளிக்கிறது. அதேநேரத்தில் அதன் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் செரிமானத்திற்கு உதவுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எத்தனை வகையான உணவுகளை அடுக்கினாலும் அதற்கு இடமுண்டு. இதில் பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் உள்ளதால் குடல் நலனுக்கு நல்லது.

பலா இலை: பலா இலைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதை மெல்லிய குச்சிகளை வைத்து தைத்து தட்டு போல உருவாக்கும் பழக்கம் தமிழர்களிடம் உண்டு. வீடுகளில் சிறப்பு நாட்களில் பொங்கல் வைத்து இந்த இலைகளில்  இறைவனுக்கு படைக்கும் வழக்கம் மக்களிடம் உள்ளது. இதில் பரிமாறப்படும் உணவுகளில் லேசான இனிப்பு தன்மை சேரும். மா, பலா, பூவரசு இலைகளிலும் மற்றும் பனை ஓலைகளிலும் கொழுக்கட்டை மாவை வைத்து மடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கும் போது நீராவி உணவில் உறிஞ்சப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

புரசு இலை (பலாஷ்): கோயில்களில் பிரசாதம் வழங்குவதற்கு இந்த இலையை பயன்படுத்துகின்றனர். நம் உடலில் செரிமானத்தை தூண்டும் திறன் இதற்கு உண்டு. இந்த இலை புனிதமாகவும் உண்பதற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. இதில் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட உயிரியக்க கலவைகள் உள்ளன. மேலும், இந்த இலைகள் மக்கும் தன்மை உடையவை.

வாழையிலை உணவு
வாழையிலை உணவு

தாமரை இலை: இலையின் வடிவமே தட்டு போல் இருக்கும். தாமரை இலையின் மேல் பகுதியில் தண்ணீர் ஒட்டாது. இலையின் மறுபக்கம் உணவு பரிமாற பயன்படும். பெரும்பாலும் உணவை பார்சல் கட்டுவதற்கு இதைப் பயன்படுத்துவர்.  பூக்கடைகளில் கட்டிய பூக்களை இந்த இலையில் மடித்துக் கொடுப்பார்கள். மேலும் இறைச்சி கடைகளிலும் அதிகமாக பார்சல் பண்ண பயன்படுகிறது. இந்த இலைகள் அவற்றின் ஹைட்ரோபோபிக் மற்றும் சுய சுத்தப்படுத்தும் பண்புகளுக்குப் பெயர் பெற்றவை. அவை ஆக்ஸிஜனேற்றம் மற்றும்  அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் தனித்துவமான நறுமணம் சாப்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
திருமணத்திற்குப் பின்பு பெண்களின் நட்பு வட்டம் முறிந்துபோவது ஏன் தெரியுமா?
தாமரை இலை உணவு

சால் மற்றும் தேக்கு இலைகள்: இந்த இலை நீடித்து உழைக்கும். அளவில் பெரியவை மற்றும் மிகவும் கடினமானது. அதனால் அவை உணவை பரிமாற எளிதாகப் பயன்படுத்தப்படுகிறது. கோயில்களிலும், சமயக் கூட்டங்களிலும் பிரசாதம் வழங்குவதற்கு தட்டுக்களாக, கிண்ணங்களாக இவை பயன்படுத்தப் படுகின்றன. இதில் பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்புகள் உள்ளன. இதில் பரிமாறப்படும் உணவுகளின் சுவை அதிகரிக்கும். இந்த இலைகளை தட்டுகளாய் பயன்படுத்துவது  சுற்றுச்சூழல்  நட்பு. ஏனெனில் அவை மக்கும் தன்மை கொண்டவை. இந்த பாரம்பரிய நடைமுறையை ஏற்றுக்கொள்வது இயற்கையுடன் நம்மை இணைக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com