வேர்களின் முடிச்சுகளில் ஒளிந்திருக்கும் ரைசோபியம் என்ன செய்யும் தெரியுமா?

Rhizobium
Rhizobiumhttps://pachaiboomi.in

ண் வளம் பெற மண்புழு, கரையான், மரவட்டை, பூரான் என்று பல்வேறு உயிரிகள் உதவுகின்றன. இவை தவிர, தாவரத்தின் வேர்களால் மண் வளம் பெறும். அந்த வேர்களில் வாழக்கூடிய நுண்ணுயிரியாகிய பாக்டீரியாதான் ரைசோபியம். ரைசோபியம் என்பது மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துதலில் ஈடுபடக்கூடிய ஒரு பாக்டீரியா பேரினம் ஆகும். இது ஒரு நுண்ணுயிர் உரமாகும்.

பயறு வகை தாவரங்கள், பட்டாணி, பீன்ஸ், உளுந்து, பச்சை பயறு, எள் செடி, க்ளோவர், நிலக்கடலை, பாசி பயறு ஆகிய தாவரங்களின் வேர்களிலிருந்து வெளியிடப்படும் ஒரு ரசாயன உரமாகும் இது. ரைசோபியம் பாக்டீரியா இந்த வேர்களின் முடிச்சுகளுக்குள் கூட்டுறவு பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றன. இந்தத் தாவரங்களின் வேர்கள் பாக்டீரியாவிற்கு சர்க்கரைகள் மற்றும் பிற ஊட்டச் சத்துக்களை வழங்குகின்றன. இதற்கு கைமாறாக பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை (N2) அமோனியாவாக (NH3) மாற்றுகிறது. இது தாவரம் உடனே உறிஞ்சக்கூடிய நைட்ரஜன் ஆகும்.

காற்றில் நைட்ரஜன் நிறைந்துள்ளது. இது தாவர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இருப்பினும், தாவரங்கள் நைட்ரஜனை நேரடியாகப் பெற முடியாது என்பதால் ரைசோபியம் பாக்டீரியா நைட்ரஜனை அமோனியாவாக மாற்றி தாவரங்களுக்கு உணவாகக் கொடுக்கிறது. பருப்பு வகை தாவரங்களின் வேர்களில் ரைசோபியம் ஒரு கூட்டு வாழ்வு உறவை உருவாக்குகிறது. அதனால் தாவரங்களுக்கும், பாக்டீரியாவுக்கும் நன்மையே கிடைக்கிறது.

ரைசோபியத்தால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான அமோனியாவானது, மண்ணை வளப்படுத்துகிறது. எதிர்கால மண் வளர்ச்சிக்கு ஆதரவாக ஆக்குவதோடு, ஆரோக்கியமான, செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால வியர்க்குருவை இயற்கை முறையில் விரட்ட எளிய வழிகள்!
Rhizobium

ஒரு வருடத்திற்கு இரண்டு முறை நெற்பயிர்கள் விவசாயம் பண்ணப்படுகிறது. அதற்கு அந்த மண் வளமுடன் இல்லை என்றால் அதிக மகசூல் அடைய முடியாது. எனவே, அந்த விளை நிலத்தில் கோடையில் இரண்டு மாதத்தில் பலன் தரக்கூடிய உளுந்து, பயறு, எள், நிலக்கடலை, இவற்றை பயிர் செய்து அறுவடை முடிந்த பிறகு இந்த தாவரங்களின் வேர் முடிச்சுகளில் உள்ள அதிகப்படியான ரைசோபியத்தால் மண் வளம் பெறுகிறது. அதற்கு பிறகு நெற்பயிர்களை பயிரிடும்போது அதிக மகசூலைப் பெறலாம்.

ரைசோபியம் பாக்டீரியா ஹெக்டேருக்கு 400 கிலோ கிராம் நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தும் திறன் கொண்டது. உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிரிகள் காற்றில் உள்ள தழைச்சத்தினை நேரடியாக தாவரங்களுக்கு வழங்குகிறது. பயிர்களின் வேர் பகுதிகளில் பிற நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தினை ஊக்குவிக்கிறது.

ரைசோபியம் என்பது ஒரு டயஸோட்ரோபிக் பாக்டீரியா வகையை சார்ந்தது. ரைசோபியம், உயிர் உரங்கள் சிதைந்த அல்லது அசுத்தமான நிலத்தை மீட்டெடுக்க உதவுகிறது. ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கையான மற்றும் சுற்றுச்சூழல் நட்புறவை வழங்குவதன் மூலம் இது சமச்சீர் மண் சுற்று சூழல் அமைப்புகளை ஊக்குவிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com