'Whale fall' என்றால் என்ன தெரியுமா?

Whale fall
Whale fallImage Credits: www.laitimes.com
Published on

லகிலேயே மிகப் பெரிய கடல் உயிரினமான நீலத்திமிங்கலம் 80 முதல் 90 வருடங்கள் உயிர் வாழக்கூடியதாகும். ஒவ்வொரு திமிங்கலத்தின் உடலில் உள்ள pattern மாறுபட்டுக் காணப்படும். நீலத்திமிங்கலத்தின் குரல்தான் உலகிலேயே மிகவும் சத்தமானதாகும். உலகில் தற்போது வெறும் 10,000 முதல் 25,000 நீலத்திமிங்கலங்களே  இருக்கின்றன. அத்தகைய நீலத்திமிங்கலம் இறந்துப்போனால் என்ன நடக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

நீலத்திமிங்கலத்திற்கு தன்னுடைய இறப்பு வரப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும். இதனால் நூற்றுக்கணக்கான தொலைவு வேறு எங்கேனும் பயணம் செய்து செல்லத்தொடங்கும். பிறகு தன்னிடம் இருக்கும் ஒட்டுமொத்த வலிமையையும் பயன்படுத்தி கடைசியாக ஒரு டைவ் அடிக்கும்.

இதன் பிறகு நீலத்திமிங்கலத்தின் உடல் கடல் ஆழத்திற்குப் போக ஆரம்பித்துவிடும். இதைதான் 'Whale fall' என்று கூறுகிறார்கள். முதலில் சுறாக்களும், ஈல்களும் திமிங்கலத்தின் உடலை சாப்பிடத்தொடங்கும். இது பல நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். பிறகு மீதியிருக்கும் கொஞ்சம் இறைச்சியை சின்னச் சின்ன புழுக்கள் சாப்பிட ஆரம்பிக்கும். இதன் பிறகு Osadex என்னும் புழுக்கள் திமிங்கலத்தின் எலும்புகளை சாப்பிட ஆரம்பிக்கும்.

எலும்புகளில் இருந்து வெளியாகும் Hydrogen Sulphate மற்றும் Methaneஐ நம்பி பாக்டீரியாக்கள் வர ஆரம்பிக்கும். இந்த பாக்டீரியாவை உணவாக நம்பி சின்னச் சின்ன மீன்களும் மற்ற உயிரினங்களும் வரும்.

இதையும் படியுங்கள்:
ஐஸ்கிரீமை கத்தி மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி சாப்பிடுறாங்களா? எங்கே?
Whale fall

இதனால் புதிய Food chain உருவாகி சுமார் 100 வருடத்திற்கு இது தொடரும். ஒரு நீலத்திமிங்கலத்தின் இறப்பின் மூலமாக 400க்கு மேற்பட்ட வெவ்வேறு புதிய உயிரினங்களும் ஆயிரக்கணக்கான உயிரினங்களும் உணவு கிடைத்து பலனை அடைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் திமிங்கலங்கள் கப்பல் போன்றவற்றில் சிக்கி அதிகமாக இறக்கின்றன. அவ்வாறு இறந்த திமிங்கலம் கரை ஒதுங்கும்போது அதன் அருகில் நிற்பது ஆபத்து என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், திமிங்கலத்தின் உள் உறுப்புகள் அழுகி உடல் முழுவதும் வாயுவால் நிரம்பியிருக்கும். அது எந்நேரம் வேண்டுமானாலும் வெடிக்கும் தன்மையில் இருக்கும் என்பதால், அதன் அருகில் நிற்பது பாதுகாப்பில்லை என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com