ஐஸ்கிரீமை கத்தி மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி சாப்பிடுறாங்களா? எங்கே?

Dondurma ice cream
Dondurma Image Credits: Alaturka.Info
Published on

துருக்கியில் செய்யப்படும் இந்த ஐஸ்கிரீம் மிகவும் கடினமாகவும், உருகுவதற்கு நேரம் எடுத்துக் கொள்வதாலும் இதை உண்பதற்கு கத்தி மற்றும் ஃபோர்க்கை பயன்படுத்துகிறார்கள். இந்த ஐஸ்கிரீம் எவ்வளவு கடினத்தன்மைக் கொண்டது என்றால், கடும் வெயில் காலத்தில் கூட உருகுவது கடினம்.  இந்த ஐஸ்கிரீம் பற்றிய சுவாரஸ்யமான தகவலை இந்தப் பதிவில் காண்போம்.

துருக்கியில் Dondurma என்றால் ‘ஐஸ்கிரீம்’ என்று பொருள். இதை Mastic Ice cream என்று சொன்னால்தான் பெரும்பாலான மக்களுக்கு தெரியும். இந்த ஐஸ்கிரீம் kahramanmaraş என்ற இடத்தில்தான் உருவானதாக சொல்லப்படுகிறது. Dondurma ஐஸ்கிரீம் 500 வருடம் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டது.  இந்த ஐஸ்கிரீமை ஆட்டுப்பால், ஆர்சிட் இல் இருந்து எடுக்கப்படும் சாலப் என்னும் பொருள் மற்றும் mastic என்னும் பிசின், சர்க்கரை சேர்த்து செய்யப்படுகிறது.

இந்த ஐஸ்கிரீம் பிரபலமானதற்கான இரண்டு காரணங்கள், ஒன்று இது மிகவும் கடினமாக இருப்பதும், இன்னொன்று இந்த ஐஸ்கிரீம் உருகுவதற்கு வெகுநேரம் எடுத்துக் கொள்வதுமேயாகும். சாலப் மற்றும் மாஸ்டிக் பயன்படுத்துவதே இதனுடைய கடனத்தன்மைக்கு காரணம். இதனுடைய வாசனைக்கு ஆட்டுப்பால் பயன்படுத்துவதே காரணமாகும். இதனால் இந்த ஐஸ்கிரீமை சில சமயங்களில் கத்தி மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி சாப்பிடுவார்கள்.

Dondurma
Dondurma Image Credits: The Daily Meal

துருக்கியில் ஐஸ்கிரீமை கடையிலும் மற்றும் தெருவில் வண்டியில் வைத்தும் விற்கிறார்கள். வண்டியில் ஐஸ்கிரீம் விற்கும் நபர் துருக்கியின் பாரம்பரிய உடையணிந்து பெரிய குச்சு ஒன்றை வைத்து ஐஸ்கிரீமை வாடிக்கையாளர்களுக்கு தராமல் கிண்டல் செய்து விளையாடும் பழக்கம் உண்டு. அதை வாடிக்கையாளர்கள் சரியாக வாங்கிவிட்டால், அவர்கள் வெற்றிப் பெற்றதாக பொருள். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்காமல் விளையாட்டு காட்டுவதில் அவர்கள் வல்லவர்கள்.

இதையும் படியுங்கள்:
மகாபாரதத்திற்கும், அவியலுக்கும் இப்படியொரு தொடர்பு இருக்கிறதா?
Dondurma ice cream

இந்த வழக்கத்தை சிலசமயங்களில் வாடிக்கையாளர்கள் புரிந்துக்கொள்ளாமல் தவறாக எடுத்துக்கொள்வதுண்டு. அவ்வாறு நடக்கும்போது அந்த வாடிக்கையாளருக்கு அதிக ஐஸ்கிரீமை கொடுத்து ஈடுக்கட்டிவிடும் செயலும் நடக்கும். இந்த ஐஸ்கிரீமின் சுவை வாசனை மிகுந்ததாகவும், மிகவும் இனிப்பாகவும் இருக்கும். ‘Twisting Scoops’ என்னும் இந்திய ஐஸ்கிரீம் கம்பெனி தான் துருக்கி ஐஸ்கிரீமை இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப் படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துருக்கி ஐஸ்கிரீமை நீங்கள் வாங்கி சுவைத்ததுண்டா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com