இயற்கை தரும் கருப்பு ரோஜா எங்கிருக்கிறது தெரியுமா?

Nature's black rose
Black Roses
Published on

ழகான மலரான ரோஜாக்கள் பல வண்ணங்களில் உண்டு.  ஆனால் அரிதான கருப்பு வண்ண ரோஜாக்களை நீங்கள் பார்க்க வேண்டுமா? எங்கே பார்க்கலாம்? கருப்பு நிற ரோஜாக்கள் பற்றி இங்கு காண்போம்.

கருப்பு ரோஜாக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் ஒரு அரிய மற்றும் தனித்துவமான ரோஜா வகையாகும். நீங்கள் பார்க்க வேண்டும் எனில் துருக்கி நாட்டுக்கு செல்லவேண்டும். ஆம் துருக்கியின் யூப்ரடீஸ் நதியின் நீரால் வளர்க்கப்படும் இயற்கையான கருப்பு ரோஜாக்கள் உருஃபா மாகாணத்திற்கு அருகில் உள்ள தென்கிழக்கு சான்லியுர்ஃபா மாகாணத்தின் ஹால்ஃபெட்டி கிராமத்தில் மட்டுமே காணப்படுகிறது என்கிறது ஒரு குறிப்பு.

மிகவும் அரிதான வகை மலரான இது கோடையில் கருப்பாகத் தோன்றுகிறது. மற்ற பருவங்களில் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மண்ணின் அடர்த்தி மற்றும் ஆந்தோசயனின் (நீரில் கரையக்கூடிய நிறமிகள்) கலவையால் இந்த மாறுபாடு ஏற்படுகிறது எனவும் மண்ணின் pH-க்கு மிகவும் உணர்திறன் கொண்டதால், இந்த வகை நிறமியில் மண் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் உண்மையான கருப்பு ரோஜாக்கள் இயற்கையில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது, ஏனெனில் பெரும்பாலும் மண் பரப்புகள் ரோஜாக்கள் உண்மையான கருப்பு நிறத்தை உருவாக்கத் தேவையான நிறமியை உற்பத்தி செய்யும் மரபணு திறனைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், பல வகையான ரோஜாக்கள் அடர் சிவப்பு அல்லது மெரூன் நிறத்தைக் கொண்டுள்ளன, அவை கண்ணுக்கு கருப்பு நிறமாகத் தோன்றலாம் என்றும் கருத்து உண்டு.

இதையும் படியுங்கள்:
‘மிளா’ மான்களை கண்டதுண்டோ?
Nature's black rose

இருப்பினும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள்,  கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் பல நாடுகள்,  சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா உட்பட ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கருப்பு ரோஜாக்கள் பயிரிடப்படுகிறது.

மேலும் துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட இந்த ரோஜா, நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக காடுகளில் வளர்வதைக் காணலாம். ஈரான் மற்றும் ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும், சீனா மற்றும் இந்தியா உட்பட ஆசியாவின் சில பகுதிகளிலும் உள்ள காடுகளில் கருப்பு ரோஜாக்கள் வளர்வதைக் காணலாம்.

3 வகைகளில் அறியப்படுகிறது கருப்பு ரோஜாக்கள். முதல் வகையான பிளாக் பக்காரா எனப்படும்  பிரபலமான கருப்பு ரோஜா அதன் அடர்த்தியான வெல்வெட் இதழ்களுக்கு பெயர் பெற்றது. 2 வது வகையான 'பிளாக் மேஜிக்' எனப்படும் கருப்பு ரோஜா 'பிளாக் பக்காரா'வை விட சற்று இலகுவான  இன்னும் ஆழமான, அடர் சிவப்பு நிறமாகவே உள்ளது. 3 வது வகை 'டஸ்கனி சூப்பர்ப்' அதன் இதழ்களில் சற்று அதிக ஊதா நிறத்தைக்கொண்டு பெயருக்கு ஏற்ப சூப்பர்ப் ஆக உள்ளது.

பொதுவாகவே ரோஜாக்கள் மருத்துவகுணம் மிக்கது என நிரூபித்துள்ளது மருத்துவம். இதில் கருப்பு ரோஜாக்கள் மட்டும் விதம் விலக்காகுமா? இந்த ரோஜாக்களும் பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுத்தப் படுவதாக கூறப்பட்டாலும்  அவற்றின் செயல்திறன் அறிவியல் பூர்வமாக விரிவாக நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'பல்லாண்டுத் தாவரம்’ என்பது எதுவென்று தெரியுமா?
Nature's black rose

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com