The oldest banyan tree in the world
The oldest banyan tree in the world

உலகின் பழைமையான ஆலமரம் எங்கே உள்ளது தெரியுமா?

Published on

ரங்களிலேயே மிகவும் பிரம்மாண்டமான மரம் எது என்று கேட்டால் அது ஆலமரம்தான். பிரம்மாண்டம் மட்டுமல்ல, அதன் ஆயுளும் அதிகம். ஆலமரத்தின் ஒவ்வொரு விழுதுகளும் பூமியில் இறங்கும்போது அது ஒவ்வொரு மரமாக மாறுகிறது. இப்படி மாறும் அந்த ஆலமரம் பிரம்மாண்டமாக நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

உலகின் மிகவும் பழைமையான ஆல மரங்களுள் ஒன்று மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா அடுத்த ஷிப்பூரில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திர போஸ் தாவரவியல் பூங்காவில் உள்ளது. இதன் ஆயுளும் நீண்டது. சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இந்த மரம் மட்டுமே 4.67 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

இம்மரத்தின் வேர்கள்தான் அதற்குக் காரணம். அவை நீண்ட தூரம் பரந்து விரிந்து பிரம்மாண்டமான பரப்பளவையும், தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. எனினும் இந்த மரத்தின் தண்டு பகுதியைக் கண்டறிய முடிவதில்லை. இரண்டு முறை சூறாவளி காற்று இந்த ஆலமரத்தைத் தாக்கியது. ஒரு வகை நோய் தாக்குதலும் இந்த ஆல மரத்தின் தண்டுப் பகுதியை சேதப்படுத்திவிட்டது.

நோய் தாக்குதல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் 1925ம் ஆண்டு இந்த ஆலமரத்தின் தண்டு பகுதியை அகற்ற வேண்டியதாயிற்று. ஆனாலும், அது மரத்தின் வளர்ச்சியை தடுக்கவில்லை. வேர்களின் துணையுடன் ஆலமரம் பரந்து விரிந்து கிளைகளைப் பரப்பியது.

இதையும் படியுங்கள்:
உடல் நலம் பேண காலையில் தவிர்க்க வேண்டிய 4 வகை உணவுகள்!
The oldest banyan tree in the world

இப்போது மொத்தம் 3,772 வேர்கள் இந்த ஆலமரத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்தப் பூங்காவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மரங்கள் உள்ளன. ஆனாலும், இந்த ஆலமரத்தின் பிரம்மாண்ட தோற்றத்துக்கு மற்ற மரங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

1787ம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனியை சேந்த கர்னல் ராபர்ட் கைட் என்பவர் தேயிலை, தேக்கு போன்ற வணிக ரீதியாக தாவர வகைகளை வளர்க்கும் நோக்கத்தில் இந்தத் தோட்டத்தை நிறுவினார். அவர்தான் இந்த ஆலமரத்தையும் நட்டார். ஆனால், அதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஆலமரமாக மாறும் என்பது அப்போது அவருக்குத் தெரியாது. அந்த அளவுக்கு நீண்டு வளர்ந்துவிட்டது. இந்தத் தாவரவியல் பூங்கா 2009ம் ஆண்டு முதல் இயற்கை விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸின் நினைவாக அவரது பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com