Gem stone
Gem stone

உலகிலேயே மிகப்பெரிய ரத்தினக் கல் கண்டுபிடிப்பு… எங்கு தெரியுமா?

உலகின் மிகப்பெரிய ரத்தினக் கல் ஒன்று தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தினக் கல் சுமார் 802 கிலோ எடைக் கொண்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ7,500 கோடி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக, ரத்தினம் என்பது உலகின் மிகவும் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவே கருதப்படுகிறது. ரத்தினக் கற்களின் வண்ணங்கள் மற்றும் பண்புகளின் அடிப்படையில் வைரங்கள், மாணிக்கங்கள், மரகதங்கள், முத்துக்கள் என பிரிக்கப்படும். என்னத்தான் இப்படி வெவ்வேறாக பிரிந்தாலும், ரத்தினங்களின் தரம் மட்டும் குறையவே குறையாது. காலத்தின் மாற்றத்தால் செயற்கையான ரத்தினக் கற்களை மக்கள் உருவாக்கினாலும், அவை இயற்கை ரத்தினக் கற்களுக்கு ஈடாக முடியாது என்பது மட்டும் உண்மை. இந்த ரத்தினக் கற்கள் நகைகளுக்கு பயன்படுத்தப்படும் அழகியல் தொடர்பான கல் என்றாலும், இது வரலாற்று மற்றும் இயற்கையின் சிறப்பு அம்சமாகும் என்பதில் சந்தேகமேயில்லை. அந்தவகையில் இலங்கையில் ஒரு மிகப்பெரிய நீல நிற கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் பல மிகப்பெரிய ரத்தினக் கற்கள் அவ்வப்போது கிடைத்துதான் வருகின்றன. உலகில் இதுவரை கண்டுப்பிடித்ததிலேயே இப்போது கண்டுப்பிடிக்கப்பட்ட ரத்தினக் கல்லே மிகப்பெரியது என்று தெரியவந்துள்ளது. மேலும், இலங்கையில் நிறைய ரத்தினக் கற்கள் விலை உயர்ந்ததாகவும், பெரியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 2021ம் ஆண்டு பெரிய அளவிலனா நீல நிற ரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போதைக்கு அதுதான் உலகளவில் மிகப்பெரிய ரத்தினக் கல்லாக அறிவிக்கப்பட்டது. ஆகையால், Corundum Blue Sapphire என்று பெயரிடப்பட்ட இந்தக் கல்லுக்கு Queen Of Asia என்ற பட்டப்பெயர் வைக்கப்பட்டது. அந்த மொத்த கல்லின் அளவு 310 கிலோவாகும். அதேபோல், இந்த Queen Of Asia கல் கண்டெடுக்கப்பட்டதற்கு முன்னர், மிகப்பெரிய நட்சத்திர வடிவிலான ரத்தினக் கல்லும் கண்டுபிடிக்கப்பட்டது. 510 கிலோ எடைக் கொண்டதாக இருந்த இந்த நட்சத்திரக் கல் உலகின் மிகப்பெரிய நட்சத்திர ரத்தினக் கல்லாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கல்லிற்கு அதிர்ஷ்ட கல் என்று பெயரிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஏதென்ஸில் மோசமான புழுதி புயல்… ஆரஞ்சு நிறத்தில் மாறிய நகரம்!
Gem stone

இந்த வரிசையில் இப்போது மற்றொரு ரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் இலங்கையில்தான் கிடைத்துள்ளது. 802 கிலோ எடைக் கொண்ட இந்த கல் ரூ.7,500 கோடி மதிப்புடைய ரத்தினக் கல்லாகும். இது இயற்கையான ஒளி ஊடுருவல் தன்மை உடைய நீல நிறம் கொண்ட படிகம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த செய்தியை இலங்கையின் உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. எனெனில், உலக ரெக்கார்டின் படி இன்னும் 2021ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட Corundum Blue Sapphire ரத்தினக் கல்லே, உலகளவில் பெரிய ரத்தினக் கல்லாக உள்ளது. விரைவில், அதிகாரப்பூர்வமாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட கல் ரெக்கார்டில் பதிவிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com